ஒரே ஒரு எம்பி பதவிக்கு ஆபத்து? டெல்லி கதவை தட்டிய ஓபி ரவீந்திரநாத் குமார்! ம்ஹும் வாய்ப்பில்லை போலயே?
டெல்லி : தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தேர்தல் வெற்றியை செல்லாது என தொடரப்பட்ட வழக்கில், ரவிந்திரநாத்தின் மேல்முறையீட்டு மனுவை நிராகரித்ததோடு, வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதிமுகவில் அதிகார மோதலில் பின்னடைவை சந்தித்து வரும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு தற்போது ஆதரவாக நிற்பவர்களில் முக்கியமானவர் ரவீந்திரநாத். ஓபிஎஸ்ஸின் மூத்த மகனான இவர் தேனி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக இருக்கிறார்.
கடந்த 2019ல் நடந்த மக்களவைத் தேர்தலில் தமிழக முழுவதும் அதிமுக உறுப்பினர்கள் மண்ணைக் கவ்விய நிலையில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத் குமார் மட்டும் 76 ஆயிரத்து 319 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

ஓபி ரவீந்திரநாத் குமார்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளில் அதிமுக கூட்டணி படு தோல்வியை சந்தித்த நிலையில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் ஓபி ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றதோடு அதிமுக நாடாளுமன்ற குழு தலைவராகவும் நியமிக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் தொடர்பான விவகாரங்களில் டெல்லியில் உள்ள பாஜக மேலிட தலைமையை தொடர்பு கொண்டு அவருக்கு ஆதரவாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதிலும் ஓபி ரவீந்திரநாத் குமார் முக்கிய பங்காற்றி வருகிறார்.

உயர் நீதிமன்ற வழக்கு
இந்த நிலையில் தான் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் உச்ச நீதிமன்ற உத்தரவு வெளியாகி இருக்கிறது. தேனி தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் கடந்த 2020ஆம் ஆண்டு," தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பி.ரவீந்திரநாத் குமார், வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றுள்ளார். எனவே, அவரது தேர்தல் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

மனு தள்ளுபடி
இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஓ.பி.ரவீந்திரநாத் குமார் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், தொகுதி வாக்காளர் என்ற அடிப்படையில் மிலானி என்பவர் தொடர்ந்துள்ள இந்த வழக்கு செல்லத்தக்கது அல்ல. மேலும் தேர்தல் வழக்குத் தொடர்வதற்கான உரிய வழிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார். ஆனால் ரவீந்தரநாத் குமாரின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

உச்சநீதிமன்றம் அதிரடி
இதனை தொடர்ந்து மிலானி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி ஏற்கனவே ரவீந்திரநாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, ரவீந்திரநாத் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, தனது தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரும் மனுவை தள்ளுபடி செய்யக்கோரிய ஓ.பி.ரவீந்திரநாத் மனு தொடர்பாக உயர்நீதிமன்ற வழக்கில் தலையிட விரும்பவில்லை என்ற நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications