“இண்டிகோ விஷயத்தில்.. நீதிமன்றம் அவசரமாக தலையிட வேண்டிய அவசியம் இல்லை” - உச்சநீதிமன்றம்
டெல்லி: இண்டிகோ விமானங்கள் 7வது நாளாக தொடர்ந்து ரத்தாகி வருவதால், ஏராளமான பயணிகள் கடும் அவதியுற்று வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த விஷயத்தில் நீதிமன்றம் அவசரமாக தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
இன்று டெல்லி மற்றும் பெங்களூரு விமான நிலையங்களில் இருந்து புறப்படவிருந்த இண்டிகோ விமானங்களில் 250-க்கும் மேற்பட்டவை ரத்து செய்யப்பட்டன. டெல்லி விமான நிலையத்தில் மட்டும் 134 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதேசமயம், பெங்களூரு விமான நிலையத்தில் 117 சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

விமானிகள் பணி நேரம் தொடர்பான ஒழுங்குமுறை மாற்றங்களை காரணம் காட்டி, இண்டிகோ நிறுவனம் டிசம்பர் 2 ஆம் தேதி முதல் நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்து வருகிறது. இந்த இடையூறுகள் 7வது நாளாகத் தொடர்வதால், நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் லட்சக்கணக்கான பயணிகள் சிக்கித் தவிக்கின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி, நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு முன்பு வழக்கறிஞர் ஒருவர் முறையிட்டார். இது குறித்து நீதிபதிகள் கூறுகையில், "இண்டிகோ விமானச் சேவைகளின் ரத்து காரணமாக லட்சக்கணக்கான மக்கள் விமான நிலையங்களில் தவித்து நிற்கும் நிலையை உணர்ந்திருக்கிறோம். இது ஒரு தீவிரமான விவகாரம். லட்சக்கணக்கானோர் சிக்கித் தவிக்கின்றனர். இந்திய அரசு இதற்கு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை நாங்கள் அறிவோம்" என்று தெரிவித்திருக்கின்றனர்.
பணி நேரம் தொடர்பான ஒழுங்குமுறை மாற்றங்களை சமீபத்தில் சிவில் விமான போக்குவரத்து துறை அறிமுகப்படுத்தி இருந்தது. அதாவாது, விமானங்கள் எவ்வளவு நேரம் ஓய்வெடுக்க வேண்டும், எத்தனை விமானங்களை ஒரு நாளைக்கு இயக்க வேண்டும் என்பது குறித்து ஒழுங்குமுறை மாற்றங்கள் வெளியாகியுள்ளன. இந்த மாற்றங்களை அமல்படுத்த ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் வரை விமான நிறுவனங்களுக்கு சிவில் விமான போக்குவரத்து துறை டைம் கொடுத்தது.
ஆனால், குறைந்த ஊழியர்களை கொண்டு எல்லாவற்றையும் சரி செய்துவிடலாம் என்று இண்டிகோ மனக்கணக்கு போட்டிருந்தது. கடைசியாக இந் விதிமுறைகளை அமல்படுத்துவதற்கான காலம் முடிவுற்ற நிலையில், இண்டிகோ தவித்தது. கூடுதல் விமானிகளையும், ஊழியர்களையும் நியமிப்பதற்கு பதில், நூற்றுக்கணக்கில் விமானங்களை நிறுவனம் கேன்சல் செய்தது. எனவே லட்சக்கணக்கான பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த போராட்டம் காரணமாக மத்திய அரசு தற்போது விதிகளை அமல்படுத்த பிப்ரவரி மாதம் வரை கால அவகாசம் கொடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications