ஆளுநர், ஜனாதிபதி அதிகாரங்களை உச்ச நீதிமன்றம் எடுத்துக்கொள்ள முடியாது.. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்
டெல்லி: மத்திய அரசு கூறுவது போல ஆளுநருக்கு மசோதாக்களை நிறுத்தி வைக்கும் 4-வது வாய்ப்பு இல்லை. குடியரசு தலைவர் உரிய காரணம் இன்றி மசோதா மீது முடிவு எடுக்க தாமதிக்கும் போது நீதிமன்றம் குறிப்பிட்ட அளவு தலையிடும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலவரம்பு நிர்ணயித்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் விளக்கம் கோரிய மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல்.S.சந்தூர்கர் ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்தது. தீர்ப்பில் கூறப்பட்ட சில முக்கிய அம்சங்கள் வருமாறு:

அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்
ஆளுநர், ஜனாதிபதிக்கான அதிகாரங்களை உச்ச நீதிமன்றம் எடுத்துக்கொள்ள முடியாது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று ஆளுநர்களுக்கு உத்தரவிட முடியாது. அதேபோல, ஆளுநர்களுக்கு கெடு விதிக்கவும் முடியாது.
அதே நேரத்தில், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர்கள் காலவரையின்றி நிறுத்தி வைக்க முடியாது. ஆளுநர்கள் மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேறுபாடுகளை களைய வேண்டும். மசோதாக்கள் மீதான நடவடிக்கைக்கு ஆளுநரை பொறுப்பாக்க முடியாது. மசோதாக்களுக்கு குறிப்பிட்ட கால அளவில் ஒப்புதல் தர வேண்டும்.
4-வது வாய்ப்பு இல்லை
மத்திய அரசு கூறுவது போல ஆளுநருக்கு மசொதாக்களை நிறுத்தி வைக்கும் 4-வது வாய்ப்பு இல்லை. குடியரசு தலைவர் உரிய காரணம் இன்றி மசோதா மீது முடிவு எடுக்க தாமதிக்கும் போது நீதிமன்றம் குறிப்பிட்ட அளவு தலையிடும்.
மசோதாக்களில் உள்ள அம்சங்களை பார்க்காமல் ஆளுநர் செயல்பட வேண்டும் என்ற வழிகாட்டுதலை மட்டுமே விதிக்க முடியும். ஒவ்வொரு முறையும் மசோதாவை ஆளுநர், குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பும் போது விதி 143 கீழ் ஜனாதிபதி விளக்கம் கேட்கக்கூடாது.












Click it and Unblock the Notifications