Whatsapp -க்கு பதில் Arattai பயன்படுத்தலாமே.. உச்சநீதிமன்றத்தில் நடந்த விவாதம்.. பின்னணி
டெல்லி: வாட்ஸ்அப்புக்கு மாற்றாக தமிழகத்தின் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜோஹோ நிறுவனத்தின் ‛அரட்டை' செயலி மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. இந்நிலையில் தான் ‛வாட்ஸ்அப் போனால் என்ன? அரட்டை செயலியை பயன்படுத்தலாமா? என்று பெண் டாக்டருக்கு உச்சநீதிமன்றம் அட்வைஸ் கூறியது அதிக கவனம் பெற்றுள்ளது.
நம் மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப், பேஸ்புக், எக்ஸ் உள்பட பல்வேறு சமூக வலைதள பக்கங்கள் அமெரிக்க நிறுவனங்களின் தயாரிப்பாகும். தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரிகளை போட்டுள்ளதால் உள்நாட்டு பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கூறி வருகிறார்.

இதனால் பலரும் வெளிநாட்டினரின் தயாரிப்புகளுக்கு பதில் உள்நாட்டு நிறுவனங்களின் பொருட்களை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். அந்த வகையில் வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக பலரும் ‛அரட்டை' செயலியை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இந்த ‛அரட்டை' செயலி தமிழ்நாட்டின் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜோஹோ நிறுவனத்துக்கு சொந்தமானதாகும்.
தற்போது ‛அரட்டை' மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இப்படியான சூழலில் தான் ‛வாட்ஸ்அப் போனால் என்ன? அரட்டை செயலியை பயன்படுத்தலாமே?'' என்று உச்சநீதிமன்றம் ‛அட்வைஸ்' சொல்லி இருப்பது அந்த செயலிக்கு பெரிய பூஸ்ட்டாக பார்க்கப்படுகிறது.
டெல்லியை சேர்ந்தவர் ராமன் குந்த்ரா. டாக்டர். இவரது வாட்ஸ்அப் கணக்கு சமீபத்தில் முடக்கம் செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் உச்சநீதிமன்றத்தில் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 32ன் கீழ் ரிட்மனு தாக்கல் செய்தார். அதில், ‛‛நான் டாக்டராக இருக்கிறேன். வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வந்தேன். தனிப்பட்ட பயன்பாடு மற்றும் தொழில் சார்ந்த பயன்பாட்டுக்கு இந்த வாட்ஸ்அப் கணக்கை பயன்படுத்தினேன். ஆனால் திடீரென்று வாட்ஸ்அப் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இது என் அடிப்படை உரிமையை தடுக்கிறது. இந்த முடக்கத்தை ரத்து செய்ய வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா , விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‛‛வாட்ஸ்அப் பயன்பாடு மற்றும் முடக்கம் உள்ளிட்டவை அரசியலமைப்பு சட்ட உரிமையின் கீழ் வராது. அதேவேளையில் தனியார் நிறுவனத்தின் வாட்ஸ்அப் உள்ளிட்ட பிற செயலிகளை பயன்படுத்தும்போது அதன் விதிகளுக்கு உட்பட வேண்டும். இதனால் உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது'' எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
முன்னதாக வழக்கு விசாரணையின் நீதிபதி சந்தீப் மேத்தா, ‛‛இப்போது பல தகவல் தொடர்பு செயலிகள் உள்ளன. அதனை நீங்கள் பயன்படுத்தலாம். சமீபத்தில் கூட இந்திய நிறுவனத்தை சேர்ந்த ‛அரட்டை' செயலி வந்தது. மேக் இன் இந்தியா என்ற வகையில் அதனை பயன்படுத்தலாம்'' என்று கூறினார். உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரே இப்படி கூறியிருப்பது ‛அரட்டை' செயலிக்கு பூஸ்ட்டாக அமைந்துள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications