தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம்.. இடைக்கால தடை விதித்த வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழக பல்கலைகழகத்துக்கு துணைவேந்தர் நியமனம் செய்வது தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு செய்த மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசு, ஆளுநர் மாளிகை, யுஜிசி பதிலளிக்க வேண்டும் என்று 4 வாரம் காலஅவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடைக்கு, தடை விதிப்பது பற்றி அடுத்த விசாரணையின்போது முடிவு எடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கும் வகையில் தமிழகஅரசு மசோதா நிறைவேற்றியது. இந்த மசோதாக்கள் ஆளுநர் ஆர்என் ரவியின் ஒப்புதலுக்குஅனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அவர் ஒப்புதல் அளிக்கவில்லை.

supreme court university vice chancellor

இதையடுத்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நிலுவையில் உள்ள 9 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியது. உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளித்தது. துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான சட்டங்களை அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு.

இந்த சட்டத்தை எதிர்த்து திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், பல்கலைக்கழகங்களை அரசியல் சக்திகளிடம் இருந்து பாதுகாக்கவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகவும், துணைவேந்தர் நியமிக்கும் நடைமுறை துவங்கப்பட்டு விட்டது. துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளுக்கு முரணாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

அதற்கு உயர்கல்வித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன் ‛‛ஆளுநரை, பல்கலைக்கழக வேந்தர் என்ற நிலையில் இருந்து நீக்கவில்லை. துணைவேந்தர் நியமன அதிகாரம் மட்டுமே அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. மனுவுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள அரசிதழ் தவறானது. இந்த அரசிதழ் ஜோடிக்கப்பட்டது. உண்மையானதல்ல. இது மனுதாரருக்கு எப்படி வந்தது என விசாரிக்க வேண்டும். அவசரமாக விசாரிக்க வேண்டும் என எந்த காரணங்களும் மனுவில் தெரிவிக்கப்படவில்லை'' என்றார்.

பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், தமிழக அரசு சட்டங்கள், பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு முரணானது என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், துணைவேந்தர்களை நியமிக்கும் வேந்தரின் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டப்பிரிவுகளுக்கு இடைக் கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு சார்பில் நீதிபதிகள் பிவி நரசிம்மா, ஆர் மகாதேவன் அமர்வு இன்று விசாரணை நடத்தியது. அப்போது வழக்கு தொடர்பான தமிழக அரசின் மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசு, ஆளுநர் மாளிகை, யுஜிசி மற்றும் உயர்நீதிமன்ற இடைக்கால தடை விதிக்கப்பட்ட வழக்கின் மனுதாரர் வெங்கடாஜலபதி உள்ளிட்டவர்கள் 4 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும் துணை வேந்தர் நியமனம் தொடர்பான விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிகப்பது குறித்த அடுத்த விசாரணையின்போது முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+