ஒரே பாலின திருமணம்: அனைத்து மாநில அரசுகளும் 10 நாட்களில் கருத்து தெரிவிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: ஒரே பாலினத்தவர் திருமணத்துக்கு அங்கீகாரம் கோரும் விவகாரத்தில் அனைத்து மாநில அரசுகளும் 10 நாட்களில் கருத்து தெரிவிக்க உச்சநீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஒரே பாலினத்தவர் திருமணத்துக்கு அங்கீகாரம் தர வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் வழக்கு. இந்த பொதுநலன் வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் ஒரே பாலினத்தவர் திருமண விவகாரத்தில் நாடாளுமன்றம்தான் முடிவு எடுக்க வேண்டும்; நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கவே கூடாது என்பது மத்திய அரசின் வாதமாக இருந்து வருகிறது.
அதாவது ஒரே பாலினத்தவர் திருமணம் செய்கிற போது ஒரு புதிய சமூகம் உருவாகிறது; இப்படியான ஒரு புதிய சமூகம் உருவாக்கப்படுதல் குறித்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் சபையாகிய நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்பது மத்திய அரசின் நிலைப்பாடு.
ஆனால் ஒருவரது திருமண உரிமையை மறுப்பது என்பது அவரது குடியுரிமையை மறுப்பதாகும்; ஆகையால் தன்பாலின அல்லது ஒரே பாலினத்தவர் திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பது அவர்கள் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதம்.
இன்றும் இந்த வழக்கில் விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது மத்திய அரசு சார்பாக புதியதாக ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், அனைத்து மாநில அரசுகளையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தபட்டது. இதனையடுத்து அனைத்து மாநில அரசுகளும் 10 நாட்களில் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications