Prashant Kishor: பீகார் தேர்தலை ரத்து செய்யணுமா? பிரசாந்த் கிஷோர் கட்சியை வெளுத்துவிட்ட உச்சநீதிமன்றம்..கடும் கண்டனம்
டெல்லி: பீகார் சட்டசபை தேர்தலுக்கு எதிராக பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது. ‛‛தேர்தலில் தோல்வியைத் தழுவிய பிறகு , நீதிமன்றத்தை நாடி நிவாரணம் தேட முயற்சிப்பதா? தேர்தலில் எவ்வளவு ஓட்டு வாங்குனீர்கள்? பீகார் சட்டசபை தேர்தலை ரத்து செய்ய வேண்டுமா? என்று உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியது.
பிரபல தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்தவர் பிரசாந்த் கிஷோர். பீகாரை சேர்ந்த இவர், ஜன்சுராஜ் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார்.
பீகாரில் கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 238 தொகுதிகளில் களமிறங்கியது. இதில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

தேர்தலில் படுதோல்வி
இன்னும் சொல்லப்போனால் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. 236 தொகுதிகளில் அவரது வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். இந்நிலையில் தான் பீகார் சட்டசபை தேர்தலில், தேர்தல் நடத்தை விதி மீறப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் மனு
இதனை இந்திய தேர்தல் ஆணையம் கண்டுக்கொள்ளவில்லை என்று கூறி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‛‛பீகாரில் சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு சற்று முன்பாக முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான பீகார் அரசு 'முதலமைச்சர் மகளிர் வேலைவாய்ப்பு திட்டம்' என்பதை அறிமுகம் செய்தது.
இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண்ணுக்கு சுய தொழில் தொடங்க ரூ.10,000 நேரடியாக வழங்கப்படும் என்றும், பின்னர் அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்திருந்தது.
மகளிர் சுயஉதவி குழு
இந்தத் திட்டத்திற்கான தகுதி, 'ஜீவிகா' (JEEVIKA) என்ற மகளிர் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினராக இருக்க வேண்டும் என்றும். உறுப்பினராக இல்லாதவர்கள் அதில் சேர்ந்து பலன் பெறலாம் என்றும் மாநில அரசு அறிவித்தது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பு சுமார் ஒரு கோடி பெண்கள் ஜீவிகா குழுக்களுடன் இணைந்திருந்தனர். ஆனாலும் 1.56 கோடி பெண்களுக்கு நிதி வழங்கப்பட்டதாக பத்திரிகைளில் செய்திகள் வெளியாகி உள்ளது.
தேர்தல் நடத்தை விதிமீறல்
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகும் கூட புதிய பயனாளிகள் சேர்க்கப்பட்டு பணம் வழங்கப்பட்டது. இது ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்குகளை பெற வைக்கும் முறைகேடாக உள்ளது.
அதுமட்டுமின்றி நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல்களின் அடிப்படை தன்மையை சீர்குலைத்துள்ளது. மேலும் இந்த நடவடிக்கை ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுவதைக் காட்டுகிறது.
ரூல்ஸ் மீறப்பட்டுள்ளது
தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, வாக்காளர்களைக் கவரக்கூடிய புதிய நலத்திட்டங்களை அறிவிப்பது, ஏற்கனவே உள்ளவற்றை விரிவுபடுத்துவது, புதிய நிதிகளை வெளியிடுவது அல்லது பயனாளிகள் சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்துவது உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கிறது.
ரூல்ஸ் இப்படி இருந்ததும் கூட தேர்தல் ஆணையம் தலையீடு செய்யவில்லை. இதனால் தேர்தல் நடைமுறை முற்றிலுமாக மீறப்பட்டுள்ளது'' என மனுவில் கூறப்பட்டு இருந்தது.
வழக்கறிஞர் வைத்த வாதம்
இந்த மனு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பக்சி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. ஜன் சுராஜ் கட்சி சார்பில் வழக்கறிஞர் சியூ சிங் ஆஜரானார்.
அப்போது அவர், ‛‛ பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கும் திட்டம் தேர்தல் அறிவிப்புக்கு சற்று முன்பு வெளியிடப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகும் பணம் வழங்கப்பட்டது.
மாநிலம் பெரும் நிதி நெருக்கடியில் இருக்கும்போதும், தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்த பிறகும் 35 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தலா ரூ.10,000 உடனடியாக வழங்கப்பட்டது. இதனை இலவசமாக தான் பார்க்க வேண்டும்'' என்று கூறினார்.
தலைமை நீதிபதி காட்டம்
இதற்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த், "நேரடியாகப் பணம் வழங்கும் திட்டம் வேறு. நீங்கள் குறிப்பிடுவது மகளிரின் சுய உதவிக் குழுக்கள் சம்பந்தப்பட்டது. இலவசம் தொடர்பான விவகாரங்களை நாங்கள் பரிசீலிப்போம்.
தேர்தலில் தோற்ற ஒரு கட்சியின் வேண்டுகோளின்படி இதை நாங்கள் ஆராய முடியாது. நீங்கள் ஆட்சிக்கு வந்தால், இதே காரியத்தைத்தான் செய்வீர்கள்" என்றார் " என்று காட்டமாக கூறினார்.
மனுவை திரும்ப பெற்றனர்
மேலும் உச்சநீதிமன்றம், "எத்தனை வாக்குகள் பெற்றீர்கள்? மக்கள் உங்களை நிராகரித்த பிறகு, நீதிமன்றத்தை அணுகுவது ஏன்? இலவச திட்டத்தை நீங்கள் அப்போதே கேள்வி கேட்டிருக்க வேண்டும். இப்போது எங்கள் முன் இருக்கும் கோரிக்கை தேர்தலை ரத்து செய்வது மட்டும்தான்.
மேலும் இத்தகைய மாநில அளவிலான பிரச்சனைகளுக்கு உயர் நீதிமன்றமே சரியான இடம். அங்கு செல்லுங்கள். சில சமயங்களில் இலவச திட்டங்கள் குறித்த பிரச்சனை தீவிரமாக இருந்தால் மட்டுமே நாங்கள் அதனை பரிசீலிப்போம் என்று உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியது. இதையடுத்து ஜன்சுராஜ் கட்சி தனது மனுவை திரும்ப பெற்றது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications