செந்தில் பாலாஜி வழக்கு.. வாழ்நாள் முழுவதும் முடிவுக்கு வராது போலயே.. டென்ஷனான உச்சநீதிமன்ற நீதிபதி!
டெல்லி: செந்தில் பாலாஜி வழக்கில் லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் சுமார் 2,000 பேரைக் குற்றவாளிகளாகச் சேர்த்து விசாரணையைத் தாமதப்படுத்த தமிழக அரசு முயற்சிப்பதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அமைச்சரைத் தவிர, வழக்கில் கூறப்படும் இடைத்தரகர்கள் யார்? என்று கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம், விசாரணையை விரைவில் முடிக்க அறிவுறுத்தியுள்ளது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது அமைச்சர் செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாகக் கூறி பணம் பெற்ற வழக்கில், அமலாக்கத்துறையால் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். சுமார் ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்த அவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியில் வந்தார். இதன்பின் மீண்டும் அவருக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டது.

ஆனால் உச்சநீதிமன்றத்தின் தலையீடு காரணமாக செந்தில் பாலாஜி அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்தார். இதனிடையே செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கின் பிரதான குற்றப்பத்திரிகையுடன் பல துணை குற்றப்பத்திரிகைகளை சிறப்பு நீதிமன்றம் இணைத்ததை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜோய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தமிழக அரசு தனது சொந்த அமைச்சரைக் காப்பாற்ற முயற்சிக்கிறது. இந்த வழக்கில் 2000 பேருக்கு மேல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதேபோல் வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்று வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், இரு வழக்குகளில் மட்டும் லஞ்சம் கொடுத்ததாக சுமார் 2000 முதல் 2500 பேர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். அதற்கான காரணம் என்ன? ஒவ்வொரு வழக்கிலும் 1000 பேரைக் குற்றம்சாட்டினால் விசாரணை எப்போது முடியும்? இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் வழக்கு முடிய போவதில்லை. செந்தில் பாலாஜி வழக்கு வாழ்நாள் முழுவதும் முடிவுக்கு வராது.
வேலைக்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் சுமார் 2000 பேரைக் குற்றவாளிகளாக சேர்த்து செந்தில் பாலாஜி மீதான விசாரணையைத் தாமதப்படுத்தத் தமிழக அரசு முயற்சிக்கிறது. அமைச்சரின் வாழ்நாளில் விசாரணைகள் முடிவடையாமல் இருப்பதை உறுதி செய்வதே அரசின் முயற்சியாக உள்ளது. அதேபோல் அமைச்சரைத் தவிர, வழக்கில் கூறப்படும் இடைத்தரகர்கள் யார்?
அமைச்சரின் பரிந்துரையின் பெயரில் செயல்பட்டதாகக் கூறப்படும் அதிகாரிகள் யார்? அப்படி ஆட்களை வேலைக்கு எடுக்கும் தேர்வுக் குழு உறுப்பினர்கள் யார்? பணம் கொடுத்துத் தேர்வானவர்களுக்கு நியமனம் வழங்கிய அதிகாரிகள் யார்? என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து இந்த கேள்விகளுக்குப் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதுமட்டுமல்லாமல் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை விரைவில் முடிக்கவும் அறிவுறுத்தி இருக்கிறது.
-
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
சும்மா வீட்ல இருக்காங்கன்னு சொல்லாதீங்க! இல்லத்தரசிகளின் உழைப்புக்கு மாதம் ரூ.30,000 மதிப்பு! சூப்பர்! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்!












Click it and Unblock the Notifications