SIR: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் 10 நாள் அவகாசம்.. உச்ச நீதிமன்றம் அதிரடி
டெல்லி: தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளையுடன் அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில், மேலும் 10 நாட்கள் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த (SIR) நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

உச்ச நீதிமன்றம் விசாரணை
தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, புதுவை, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. மார்ச் முதல் வாரத்தில் தேதி அறிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் பீகாரில் மேற்கொண்டது போல தமிழ்நாடு உள்ளிட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த (SIR) நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளன. நேற்று இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.
மேலும் 10 நாட்கள் அவகாசம்
அப்போது, தமிழ்நாட்டில் வாக்காளர்கள் தங்களது பெயர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் தரலாமா என்று தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி இருந்தது. மேற்கு வங்கத்திற்கு கால அளவு நீட்டிக்கப்பட்டது போல் தமிழ்நாட்டுக்கும் ஏன் நீட்டிக்க கூடாது? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது.
இன்று இந்த வழக்கு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் அளித்து உத்தரவிட்டது. பட்டியலில் விடுபட்டவர்கள் பெயர்களை ஊராட்சி, தாலுகா அலுவலகங்களில் வெளியிட வேண்டும் எனவும் வாக்காளர் பட்டியல் பணிக்கு தேவையான அலுவலர்களை அரசு வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள்
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளையுடன் அவகாசம் நிறைவடைய இருந்தது. இந்த நிலையில், மேலும் 10 நாட்கள் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த மாதம் 19 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு இருந்தது. இதில் தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருந்தனர். இதன் காரணமாக 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 ஆக இருந்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரமாக குறைந்தது.
நாளையுடன் முடிவடைய இருந்தது
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் மற்றும் 18 வயது பூர்த்தியானவர்கள் புதிதாக பெயர் சேர்க்க கடந்த மாதம் 19 ஆம் தேதி முதல் இந்த மாதம் 18 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியிருந்தது தேர்தல் ஆணையம். வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வந்தன.
இந்த முகாம்களில் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து விடுபட்டவர்கள் விண்ணப்பங்கள் அளித்து வந்தனர். இதற்கான கால அவகாசம் நாளை வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. இதன்படி அவகாசம் நாளை (டிச 30) முடிவடைய இருந்த நிலையில், மேலும் 10 நாட்கள் அவகாசம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications