Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குட்கா தடை சட்டம் ரத்து உத்தரவுக்கு இடைக்கால தடை கோரிய தமிழ்நாடு அரசு- உச்சநீதிமன்றம் மறுப்பு!

குட்கா தடை சட்டம் ரத்து தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்தது உச்சநீதிமன்றம்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான தடை சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்தது உச்சநீதிமன்றம். இவ்வழக்கில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க குட்கா நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். ஆண்டுதோறும் இதுசம்பந்தமாக அறிவிப்பாணைகளும் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.

Supreme Court to hear Tamilnadu Govts appeal against quash ban on Gutkha

இந்த உத்தரவை மீறியதாக சில நிறுவனங்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இதனால், அரசின் அறிவிப்பாணையை எதிர்த்தும், குற்ற நடவடிக்கையை எதிர்த்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அதேபோல, தடையை மீறியதாக ஒரு நிறுவனத்துக்கு அனுப்பப்பட்ட நோட்டீசை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்தும் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் மேல் முறையீடும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குகள் அனைத்தையும் விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் குமரேஷ் பாபு பெஞ்ச், உணவின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காக கொண்டு வரப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தில் புகையிலையை உணவுப்பொருளாக சுட்டிக்காட்டவில்லை என்றும், சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் விளம்பர படுத்த தடை மற்றும் விநியோக முறைப்படுத்தல் சட்டத்தில் புகையிலைப் பொருட்களை விளம்பரப்படுத்துவதை முறைப்படுத்துவதைப் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

மேலும் புகையிலைப் பொருட்களுக்கு முழு தடை விதிக்க இரு சட்டங்களும் வழிவகை செய்யவில்லை எனவும், தடை விதிக்கும் அதிகாரத்தை வழங்கவில்லை எனவும் குறிப்பிட்ட நீதிபதிகள், உணவு பாதுகாப்பு சட்டத்தில் அவசர நிலை கருதி தற்காலிகமாக தடை செய்ய மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது எனக் கூறி, உணவு பாதுகாப்பு ஆணையர் தனது அதிகாரத்தை மீறி, புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர். இந்த அறிவிப்பாணையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளையும் ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் குட்கா தடை சட்டம் ரத்து என்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் 17-ந்தேதி மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இவ்வழக்கில் புகையிலை நிறுவனங்களின் ஏற்கனவே கேவியட் மனுக்களைத் தாக்கல் செய்திருக்கின்றன.

தமிழ்நாடு அரசின் அப்பீல் மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரித்தது. இந்த விசாரணையின் போது சென்னை உயர்நீதிமன்றத்தின் குட்கா தடை சட்டம் ரத்து உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க தமிழ்நாடு அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் குட்கா தடை சட்ட ரத்து உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதிக்க மறுத்தது. மேலும் தமிழ்நாடு அரசின் அப்பீல் மனு மீது குட்கா நிறுவனங்கள் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+