Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிஏஏவுக்கு எதிரான 200 வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம்- மத்திய பாஜக அரசு பதிலளிக்க நோட்டீஸ்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்தியில் ஆளும் பாஜக அரசு அமல்படுத்திய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) (CAA) தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்ட மனுக்களை ஒருங்கிணைத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் இன்று விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் புதிய மனுக்களுக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2019-ம் ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான விதிமுறைகள் எதுவும் வெளியிடப்படவில்லை.

Supreme Court today to hear 200 petitions against Citizenship Amendment Act

குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் வசிக்கும் இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள்,பார்சிகள், கிறிஸ்தவர்கள் உரிய ஆவணங்கள் இல்லாமலேயே இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தால் இந்தியக் குடியுரிமை பெற வகை செய்கிறது. 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்கிறது இந்த குடியுரிமை திருத்தச் சட்டம்.

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தில் குறிப்பிட்ட நாடுகளில் வசிக்கும் இஸ்லாமியர்கள் சேர்க்கப்படவில்லை; இலங்கை தமிழர்களும் சேர்க்கப்படவில்லை. இதனால் இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. கொரோனா பரவிய காலம் என்பதால் இந்த எதிர்ப்புப் போராட்டங்கள் ஓய்ந்தன.

இந்நிலையில் திடீரென கடந்த வாரம் குடியுரிமை திருத்தச் சட்ட விதிகளை மத்திய அரசு வெளியிட்டது பெரும் சர்ச்சையாக வெடித்தது. மத்திய பாஜக அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஓவைசி உள்ளிட்டோர் வழக்குகளையும் தொடர்ந்தனர். அதாவது சிஏஏவுக்கு எதிரான பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு விதிகள் வெளியிடப்பட்டு அதனை அமல்படுத்துகிறது மத்திய அரசு. இதற்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்களின் சாராம்சம்.

உச்சநீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் சிஏஏவுக்கு எதிரான மனுக்களை விரைவாக விசாரிக்க கோரினார். ஆனால் மத்திய அரசு சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சிஏஏவுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கவே கூடாது; இந்த வழக்குகளை தொடர்ந்தவர்களுக்கு தார்மீக பொறுப்பு கிடையாது என வாதிட்டார்.

இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்ச் முன்பாக இன்று சிஏஏவுக்கு எதிரான வழக்குகள் மீது விசாரணை நடைபெற்றது. சிஏஏவுக்கு எதிரான 200க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒருங்கிணைத்து இன்றைய விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது, சிஏஏ சட்டம் நிறைவேற்றப்பட்டு 3 ஆண்டுகள் கழித்து அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இப்போது குடியுரிமை வழங்கிவிட்டால் பின்னர் திரும்பப் பெற இயலாது. ஆகையால் சிஏஏவை அமல்படுத்தும் அறிவிப்பாணையை மத்திய அரசு நிறுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார்.

இதனைத் தொடர்ந்து சிஏஏவுக்கு எதிரான புதிய மனுக்கள் மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+