ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது செல்லும்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது செல்லும் என உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பு அளித்து உள்ளது. மேலும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு அடுத்த ஆண்டு செப்டம்பருக்குள் தேர்தல் நடத்த வேண்டும்; ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கும் நடவடிக்கையை விரைவு படுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் இன்று அளித்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவின் கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வந்தது. இந்த சிறப்பு அந்தஸ்தை மத்தியில் ஆளும் பாஜக அரசு 2019-ம் ஆண்டு ரத்து செய்தது.
அப்போது ஜம்மு காஷ்மீர் மறுவரையறை மசோதா ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்த இந்த மசோதாவானது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வகை செய்தது. அதாவது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், லடாக் யூனியன் பிரதேசம் என 2 ஆகப் பிரிக்க இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துதான் சட்டசபை உண்டு; லடாக் யூனியன் பிரதேசத்துக்கு சட்டசபையும் கிடையாது என்றது இந்த மசோதா. இது நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தந்த 370வது பிரிவு ரத்துக்கு எதிரான வழக்குடன் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதற்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்து இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
உச்சநீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பில்,
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது செல்லும்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு விரைவாக மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபைத் தேர்தல 2024ம் ஆண்டு செப்டம்பருக்குள் நடத்த வேண்டும் என அதிரடியாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications