Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதென்னங்க ஜம்மு காஷ்மீர் சிறப்பு அதிகாரம் தரும் 370-வது பிரிவு? அப்படி என்ன அதிகாரம் கொடுத்தாங்க?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவை மத்திய பாஜக அரசு நீக்கியதற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை திங்கள்கிழமை தீர்ப்பு வழங்குகிறது.

நமது நாடு விடுதலை அடைந்த பின்னர் ஜம்மு காஷ்மீர் மாநிலம், இந்தியாவுடன் இணைந்தது முதலே சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலமாக இருந்து வருகிறது. 1947-ல் இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளாக பிரிவினையை எதிர்கொண்டோம். அப்போது ஜம்மு காஷ்மீரின் கடைசி மகாராஜா ராஜா ஹரிசிங், சுதந்திர நாடாக இருக்க விரும்பினார். ஆனால் ஜம்மு காஷ்மீரை தமது நிலப்பரப்புடன் சேர்க்க முயற்சித்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்தது. இதனால் ராஜா ஹரிசிங், இந்தியாவுடன் இணைந்து கொள்ள ஒப்புக் கொண்டார். இதனால் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியானது ஜம்மு காஷ்மீர்.

Supreme Court Verdict Tomorrow: What is Article 370 for Kashmir special status?

ஜம்மு காஷ்மீர் மாநிலம், நமது நாட்டுடன் இணைக்கப்பட்ட போது சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்கிற உறுதி மொழி வழங்கப்பட்டது. இதனடிப்படையில்தான் இந்தியாவுடன் இணைந்தது. இதனால் அரசியல் சாசனத்தில் 370-வது பிரிவு உருவாக்கப்பட்டு அது ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியது.

ஜம்மு காஷ்மீர் 370-வது பிரிவு தொடர்பாக பிரதமராக இருந்த பண்டித ஜஹவர்லால் நேருவுக்கும் ஜம்மு காஷ்மீர் முதல்வராக இருந்த காஷ்மீர் சிங்கம் ஷேக் அப்துல்லா இடையே பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து

1) ஜம்மு காஷ்மீரை முன்வைத்து பாதுகாப்பு, வெளியுறவு, தகவல் தொடர்பு தவிர்த்த இதர விவகாரங்களில் மத்திய அரசு ஒரு சட்டம் நிறைவேற்றினால் ஜம்மு காஷ்மீர் மாநில அரசின் அனுமதியை பெற வேண்டும்.

2) இந்தியாவின் பிற மாநில அரசு கலைக்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவு ஜம்மு காஷ்மீரில் செல்லுபடியாகாது. இந்தியாவின் குடியரசுத் தலைவருக்கு ஜம்மு காஷ்மீர் மாநில அரசை கலைக்கும் அதிகாரம் கிடையாது.

3) ஜம்மு காஷ்மீர் மாநில மக்கள் இரட்டை குடியுரிமை அதாவது மாநில குடியுரிமை; இந்திய குடியுரிமை பெறக் கூடியவர்கள்.

4) ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு தனி அரசியல் சாசனம் உருவாக்கப்படலாம்

5) ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு இந்தியாவின் தேசிய கொடி இல்லாமல் தனி ஒரு கொடி உருவாக்கிக் கொள்ளலாம்.

6) ஜம்மு காஷ்மீர் தனி சட்டமன்றத்தை வைத்து கொள்ள முடியும். அது தனித்துவமானது.

7) ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபை பதவி காலம் 6 ஆண்டுகள்.

8) 370-வது 35A பிரிவின் கீழ் இந்தியாவின் பிற மாநில மக்கள் யாரும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலம், சொத்துகள் வாங்க முடியாது.

9) இந்தியா முழுவதும் பொருளாதார அவசர நிலையை அமல்படுத்த அரசியல் சாசனத்தின் 360-வது பிரிவு பயன்படுத்தப்படும். ஆனால் இந்த 360-வது பிரிவு ஜம்மு காஷ்மீருக்கு பொருந்தாது. இந்தியா முழுவதும் பொருளாதார அவசர நிலையை அமல்படுத்தும் ஜனாதிபதியின் அதிகாரம், ஜம்மு காஷ்மீரில் செல்லாது.

10) ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்துவதற்கு அந்த மாநில அரசுதான் பரிந்துரை செய்ய வேண்டும். இந்திய அரசு அல்லது இந்திய ஜனாதிபதியால் தன்னிச்சையாக ஜம்மு காஷ்மீரில் அவசர நிலை அல்லது ஆட்சி மாற்றத்தை உருவாக்க முடியாது.

இத்தகைய அதிகாரங்கள் தொடக்கத்தில் 370-வது பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்தாலும் பின்னர் படிப்படியாக ஒவ்வொரு அதிகாரமும் நீக்கப்பட்டது 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி ஒட்டுமொத்தமாக 370-வது பிரிவே ரத்து செய்யப்பட்டது மத்திய பாஜக அரசால். அத்துடன் ஜம்மு காஷ்மீர் என்ற ஒரு மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக ஜம்மு காஷ்மீர்- லடாக் என பிரிக்கப்பட்டது. இதற்கு எதிரான வழக்குகளில்தான் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+