உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு:370-வது பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீர் பெற்ற சிறப்பு அந்தஸ்துகள் என்ன?
டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவை மத்திய பாஜக அரசு ரத்து செய்தது செல்லும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.
நமது நாடு விடுதலை அடைந்த பின்னர் ஜம்மு காஷ்மீர் மாநிலம், இந்தியாவுடன் இணைந்தது முதலே சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலமாக இருந்து வந்தது. 1947-ல் இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளாக பிரிவினையை எதிர்கொண்டோம். அப்போது ஜம்மு காஷ்மீரின் கடைசி மகாராஜா ராஜா ஹரிசிங், சுதந்திர நாடாக இருக்க விரும்பினார். ஆனால் ஜம்மு காஷ்மீரை தமது நிலப்பரப்புடன் சேர்க்க முயற்சித்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்தது. இதனால் ராஜா ஹரிசிங், இந்தியாவுடன் இணைந்து கொள்ள ஒப்புக் கொண்டார். இதனால் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியானது ஜம்மு காஷ்மீர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், நமது நாட்டுடன் இணைக்கப்பட்ட போது சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்கிற உறுதி மொழி வழங்கப்பட்டது. இதனடிப்படையில்தான் இந்தியாவுடன் இணைந்தது. இதனால் அரசியல் சாசனத்தில் 370-வது பிரிவு உருவாக்கப்பட்டு அது ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியது.
ஜம்மு காஷ்மீர் 370-வது பிரிவு தொடர்பாக பிரதமராக இருந்த பண்டித ஜஹவர்லால் நேருவுக்கும் ஜம்மு காஷ்மீர் முதல்வராக இருந்த காஷ்மீர் சிங்கம் ஷேக் அப்துல்லாவுக்கும் இடையே பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.
சிறப்பு அந்தஸ்து மூலம் ஜம்மு காஷ்மீருக்கு கிடைத்து வந்தது என்ன?
1) ஜம்மு காஷ்மீரை முன்வைத்து பாதுகாப்பு, வெளியுறவு, தகவல் தொடர்பு தவிர்த்த இதர விவகாரங்களில் மத்திய அரசு ஒரு சட்டம் நிறைவேற்றினால் ஜம்மு காஷ்மீர் மாநில அரசின் அனுமதியை பெற வேண்டும்.
2) இந்தியாவின் பிற மாநில அரசு கலைக்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவு ஜம்மு காஷ்மீரில் செல்லுபடியாகாது. இந்தியாவின் குடியரசுத் தலைவருக்கு ஜம்மு காஷ்மீர் மாநில அரசை கலைக்கும் அதிகாரம் கிடையாது.
3) ஜம்மு காஷ்மீர் மாநில மக்கள் இரட்டை குடியுரிமை அதாவது மாநில குடியுரிமை; இந்திய குடியுரிமை பெறக் கூடியவர்கள்.
4) ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு தனி அரசியல் சாசனம் உருவாக்கப்படலாம்
5) ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு இந்தியாவின் தேசிய கொடி இல்லாமல் தனி ஒரு கொடி உருவாக்கிக் கொள்ளலாம்.
6) ஜம்மு காஷ்மீர் தனி சட்டமன்றத்தை வைத்து கொள்ள முடியும். அது தனித்துவமானது.
7) ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபை பதவி காலம் 6 ஆண்டுகள்.
8) 370-வது 35A பிரிவின் கீழ் இந்தியாவின் பிற மாநில மக்கள் யாரும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலம், சொத்துகள் வாங்க முடியாது.
9) இந்தியா முழுவதும் பொருளாதார அவசர நிலையை அமல்படுத்த அரசியல் சாசனத்தின் 360-வது பிரிவு பயன்படுத்தப்படும். ஆனால் இந்த 360-வது பிரிவு ஜம்மு காஷ்மீருக்கு பொருந்தாது. இந்தியா முழுவதும் பொருளாதார அவசர நிலையை அமல்படுத்தும் ஜனாதிபதியின் அதிகாரம், ஜம்மு காஷ்மீரில் செல்லாது.
10) ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்துவதற்கு அந்த மாநில அரசுதான் பரிந்துரை செய்ய வேண்டும். இந்திய அரசு அல்லது இந்திய ஜனாதிபதியால் தன்னிச்சையாக ஜம்மு காஷ்மீரில் அவசர நிலை அல்லது ஆட்சி மாற்றத்தை உருவாக்க முடியாது.
இத்தகைய அதிகாரங்கள் தொடக்கத்தில் 370-வது பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்தாலும் பின்னர் படிப்படியாக ஒவ்வொரு அதிகாரமும் நீக்கப்பட்டது 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி ஒட்டுமொத்தமாக 370-வது பிரிவே ரத்து செய்யப்பட்டது மத்திய பாஜக அரசால். அத்துடன் ஜம்மு காஷ்மீர் என்ற ஒரு மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக ஜம்மு காஷ்மீர்- லடாக் என பிரிக்கப்பட்டது. இதற்கு எதிரான வழக்குகளில்தான் உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பளித்தது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தந்த 370-வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது செல்லும் எனவும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது செல்லும் எனவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் இன்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications