தயாராகுங்க.. கொரோனா 3வது அலை 'டார்கெட்' குழந்தைகளே - சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
டெல்லி:நாடு முழுதும் கொரோனா இரண்டாவது அலை கவலைக்கிடமான வகையில் பரவி வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரேநாளில் புதிதாக 4,12,262 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சத்து 77 ஆயிரத்து 410 ஆக உயர்வடைந்து உள்ளது. கொரோனா பாதிப்பால் நாட்டில் நேற்று 3,980 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,30,168 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 29 ஆயிரத்து 113 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 72 லட்சத்து 80 ஆயிரத்து 844 ஆக உயர்வடைந்துள்ளது.

தெளிவாக தெரியவில்லை
இந்த நிலையில், கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் என்று உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது. முன்னதாக, மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே.விஜயராகவன் நேற்று கூறுகையில், "கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது. ஆனால் இந்த மூன்றாம் கட்டம் எப்போது அல்லது எந்த நேர அளவில் நிகழும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதற்கு நாம் முன்கூட்டியே தயாராக வேண்டும் என்றும் எச்சரித்தார். இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் 3ம் அலை பரவ வாய்ப்புள்ளதாக, எய்ம்ஸ் மருத்துவ இயக்குனர் ரந்தீப் குலேரியாவும் எச்சரித்திருந்தார்.

தடுப்பூசி அவசியம்
இதுகுறித்து என்று எச்சரிக்கை விடுத்துள்ள உச்சநீதிமன்றம், COVID-19 இன் மூன்றாவது அலை வல்லுநர்களின் கூற்றுப்படி நாட்டைத் தாக்குவதோடு மட்டுமில்லாமல், குழந்தைகளையும் பாதிக்கும் என்று தெரிவித்துள்ளது. நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் எம்.ஆர்.ஷா அடங்கிய பென்ச் கூறுகையில், "நிபுணர்களின் கூற்றுப்படி இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும். எனவே ஒரு குழந்தை மருத்துவமனைக்குச் செல்லும்போது, தாயும் தந்தையும் கூட செல்ல வேண்டியிருக்கும். அதனால் இவர்களுக்கும் குழுவினருக்கு தடுப்பூசி போட வேண்டியிருக்கும், நாம் இதை ஒரு விஞ்ஞான வழியில் திட்டமிட்டு அதற்கேற்ப ஏற்பாடு செய்ய வேண்டும்" என்றது.

வீட்டில் உட்கார்ந்து இருக்கிறார்கள்
மேலும், எம்.பி.பி.எஸ் முடித்த மற்றும் பி.ஜி படிப்புகளுக்கு சேர காத்திருக்கும் மருத்துவர்களின் சேவைகளைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் ஆராய வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது. இதுகுறித்து, "இன்று நம்மிடம் 1.5 லட்சம் மருத்துவர்கள் மருத்துவப் படிப்பை முடித்திருக்கிறார்கள், ஆனால் நீட் தேர்வுக்காகக் காத்திருக்கிறார்கள். அவர்களை எப்படித் பயன்படுத்துவது? 1.5 லட்சம் மருத்துவர்கள் மற்றும் 2.5 லட்சம் செவிலியர்கள் வீட்டில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் மூன்றாவது அலைக்கு முக்கியமானவர்கள்" என்று நீதிபதி சந்திரசூட் கூறினார்.

பெற்றோர்கள் கலக்கம்
ஏற்கனவே, கொரோனா இரண்டாவது அலையில் சிக்கி நாடு சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் சூழலில், தற்போது மூன்றாவது அலை குறித்த பயமும், பதற்றமும் இப்போதே பரவத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, குழந்தைகளை பாதிக்கும் என்று அரசு கூறியுள்ள நிலையில், பெற்றோர்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர். குறிப்பாக, கர்ப்பமாக உள்ள பலரும், தங்கள் குழந்தை, உலகமே இப்படியொரு மோசமான சூழலில் இருக்கும் பிறக்க வேண்டுமா என்ற கவலையில் உள்ளனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications