Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"எங்களுக்கு வேற வழி இல்லை.." மம்தாவுக்கு அதிர்ச்சி கொடுத்த உச்ச நீதிமன்றம்.. மிக முக்கிய உத்தரவு

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடக்கும் SIR பணிகளை மேற்பார்வையிடும் வகையில், மாவட்ட நீதிபதிகளை நீதித்துறை அதிகாரிகளாக நியமிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேற்கு வங்க அரசுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் இடையே நிலவும் நம்பிக்கையின்மை காரணமாக வேறு வழியின்றி இத்தகைய முடிவு எடுத்துள்ளதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.

மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் எஸ்ஐஆர் பணிகள் தொடர்பாகப் பிரச்சனை நிலவுகிறது. இது தொடர்பாக அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது எல்லாம் இரு தரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக வாடிக்கையாகக் கொண்டுள்ளது. இந்தச் சூழலில் தான் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

Supreme court West Bengal SIR Process Have No options Orders Calcutta Hight Court to Oversee

மேற்கு வங்கம்

தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பக்ஷி, விபுல் எம். பன்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது, எஸ்ஐஆர் பணிகளை மேற்பார்வையிட முன்னாள் மாவட்ட நீதிபதிகள் மற்றும் தற்போது மாட்ட நீதிபதிகளாகப் பணியாற்றுவோரை நியமிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரு தரப்பிற்கும் இடையே மோதல் தொடர்வதால் தங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த நீதிபதிகளை கொல்கத்தா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி நியமிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேறு வழியில்லை

இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் மேலும் கூறுகையில், "மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் SIR பணிகளை முடிப்பதை முதன்மையான பிரச்சனை. இந்த வழக்கில் பல இடைக்கால உத்தரவுகள் வழங்கப்படுகின்றன. ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கும், இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும் இடையே நம்பிக்கையின்மை நிலவுகிறது. இரு தரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைக்கிறது.

இரு தரப்புக்கும் இடையேயான பழிபோடும் அரசியல் நிலவுகிறது. இதனால் நாங்கள் நீதித்துறை அதிகாரிகளாக எஸ்ஐஆர் பணிகளை மேற்பார்வையிட மாவட்ட நீதிபதிகளை நியமிக்கிறோம். நம்பிக்கையின்மை நிலவுவதால் எங்களுக்கு வேறு வழியில்லை" என்றனர்.

நீதிமன்றம் தந்த தீர்வு

தேர்தல் ஆணையத்தின் பார்வையாளர்கள் நியமனத்தை மம்தா அரசு ஆட்சேபித்தது. இதற்குத் தீர்வாகத் தற்போது நியமிக்கப்படும் நீதித்துறை அதிகாரிகள், வாக்காளர் பதிவு அலுவலர்களின் பணிகளை மேற்கொள்வார்கள் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் அல்லது நீக்குதல் தொடர்பான ஆவணங்களைச் சரிபார்த்து நியாயமான முடிவுகளை உறுதிசெய்வதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.

எஸ்ஐஆர் தொடர்பான பெயர் நீக்கம் அல்லது பெயர் சேர்ப்பு குறித்த கோரிக்கைகளில் இந்த நீதித்துறை அதிகாரிகளே இறுதி முடிவை எடுப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள SIR பணிகளைச் சீராக முடிக்க இந்த நீதித்துறை அதிகாரிகளுக்கு அனைத்து உதவிகளையும் ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

தடையில்லை

மேலும், வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணிகள் நிறைவடைந்த பகுதிகளில், பிப்ரவரி 28ம் தேதி திட்டமிட்டபடி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. SIR அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக வந்த பல்வேறு புகார்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்யவும் மேற்குவங்க போலீஸ் டிஜிபிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+