முஸ்லிம் பெண்கள் ஜீவனாம்சம் வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்த இன்னொரு கருத்து-‘மனைவி’யருக்கு உற்சாகம்!
டெல்லி: விவகாரத்தான முஸ்லிம் பெண்கள் ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு என அதிரடியாக உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கிலேயே மனைவிகளுக்கு கணவர்கள் செய்ய வேண்டிய ஆதரவு நிலைப்பாடுகள் சிலவற்றையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பாக மனைவிகளுடன் இணைந்து வங்கி கணக்கு தொடங்குதல், ஏடிஎம் கார்டுகளை மனைவிகளும் பயன்படுத்த அனுமதித்தல் ஆகியவற்றையும் பரிசீலனை செய்யலாம் என்பதுதான் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கருத்து.
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த முகமது அப்துல் சமத் என்பவர் மனைவியை முத்தலாக் கூறி விவகாரத்து செய்தார். இது தொடர்பாக குடும்ப நீதிமன்றத்தை அந்த பெண் நாடினார். இந்த வழக்கில் தெலுங்கானா குடும்ப நீதிமன்றம், விவகாரத்து பெற்ற பெண்ணுக்கு ரூ20,000 மாதந்தோறும் ஜீவனாம்சமாக வழங்க உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் சமத் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் விவகாரத்து பெற்ற பெண்ணுக்கு ரூ10,000 ஜீவனாம்சம் வழங்க உத்தரவிடப்பட்டது. இதற்கு எதிராகவே உச்சநீதிமன்றத்தில் முகமது அப்துல் சமத் முறையிட்டார். அதாவது இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 125-ன் கீழ் பெண்களுக்கு ஜீவனாம்ச உரிமை இல்லை என உச்சநீதிமன்றத்தில் சமத் தரப்பு வாதிட்டிருந்தது. இதனை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிவி நாகரத்னா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் பெஞ்ச் டிஸ்மிஸ் செய்தது. மேலும் விவாகரத்தான முஸ்லிம் பெண்கள் ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு என்றும் அழுத்தம் திருத்தமாக தீர்ப்பளித்தனர் நீதிபதிகள்.

இதே வழக்கில்தான் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு- மனைவியருக்கும் சில ஆதரவான கருத்துகளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதில்தான், மனைவியருடன் கணவர் இணைந்து கூட்டு அக்கவுண்ட்டுகளை வங்கிகளில் தொடங்கலாம்; மனைவியருடன் ஏடிஎம் கார்டுகளை பகிர்ந்து கொள்ளலாம். இவை எல்லாம் பெண்களுக்கான நிதிச்சுமையை குறைக்க நிதி உதவி செய்யக் கூடியவை. ஆகையால் இவற்றையும் பரிசீலனை செய்யலாம் என நீதிபதிகள் பிவி நாகரத்னா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தெரிவித்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications