மோடி தலையில் "கை" வைத்து.. கட்டிப்பிடிக்க நெருங்கிய ஆசிரியர்.. முகமெல்லாம் பூரித்த "நரேந்திரா"
முன்னாள் பள்ளி ஆசிரியரை நேரில் சந்தித்து மகிழ்ந்தார் பிரதமர் மோடி
டெல்லி: பிரதமர் மோடியின் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இதை பார்த்த பாஜகவினர் திரண்டு சென்று அந்த போட்டோவுக்கு கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில், பாஜக அபார வெற்றி பெற்றது.. காங்கிரஸை பின்னுக்கு தள்ளிவிட்டு ஆம் ஆத்மி மேலே வந்து கொண்டிருக்கிறது.
தற்போது குஜராத்தில் பாஜக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.. விரைவில் மீண்டும் சட்டசபை தேர்தல் வர உள்ளது. அதனால் மறுபடியும் ஆட்சியை தக்க வைத்து கொள்ள பாஜக முயன்று வருகிறது.

ஆம் ஆத்மி - காங்கிரஸ்
ஆனால், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸோ, இந்த முறையாவது ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்தில் களமிறங்கி உள்ளது.. ஆனால், காங்கிரஸை விட முந்திக் கொண்டு ஆம்ஆத்மி வேகம் எடுத்து வருகிறது.. அநேகமாக இந்த டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.. ஆக, மும்முனைப் போட்டிக்கு குஜராத் மாநிலம் தன்னை தயார் படுத்தி கொண்டு வருகிறது.

அமித்ஷா
இந்த 3 கட்சியில், கொஞ்சம் அதிகமாகவே பாஜக தீவிரம் காட்டி வருகிறது.. இதற்கு காரணம், பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால்தான்.. அதனால், குஜராத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதில் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஒருசேர ஆர்வத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. நேற்றுகூட பிரதமர் குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.. ரூ.3,050 கோடி திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டினார்.. பல வளர்ச்சி திட்டங்களை மக்களின் பயன்பாட்டுக்காக அறிவித்தார்.

பாய் நாயக்கர்
இதனிடையே, பிரதமர் மோடி தன்னுடைய பள்ளி ஆசிரியரையும் சந்தித்து பேசியுள்ளார்.. நவ்சாரி மாவட்டத்தில் உள்ள வதோதராவை சேர்ந்தவர்தான் மோடியின் முன்னாள் பள்ளி ஆசிரியர்.. அவர் பெயர் ஜக்தீஷ் பாய் நாயக்கர்.. அவர் குஜராத்தின் வாட்நகரில் உள்ள பள்ளியின் ஆசிரியராக இருந்தார்... அப்போதுதான் மோடிக்கு பாடம் கற்று தந்துள்ளதாக தெரிகிறது.. இப்போது குஜராத்தில் உள்ள வியாரா நகரில் அந்த ஆசிரியர் வசித்து வருகிறார்.

போட்டோ - மகிழ்ச்சி
பிரதமர், முன்னாள் ஆசிரியரை நேரிலேயே சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.. அப்போது இருவரும் ஒன்றாக சேர்த்து போட்டோ எடுத்துக் கொண்டுள்ளனர்.. அந்த போட்டோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.. அந்த போட்டோவில், ஆசிரியரை பார்த்து இருகரம் கூப்பி வரவேற்கிறார் பிரதமர்.. அப்போது பிரதமரின் தலையில் கை வைத்து ஆசிர்வதித்ததுடன், அவரை கட்டிப்பிடிக்கவும் முயற்சிக்கிறார்.. நம் பிரதமருக்கே 71 வயது என்றால், அந்த ஆசிரியர் எப்படியும் 20 வயது பெரியவராகவே இருப்பார்.. தன் அன்றைய மாணவனை, இன்றைய பிரதமராக உயர்ந்து நிற்பதை கண்டு பூரித்து போயுள்ளார்.

சந்தோஷம்
பிரதமரின் இந்த சந்திப்பானது, ஆசிரியர் ஜக்தீஷ் பாய் நாயக்குக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது.. பிரதமர் மோடியைப் பாராட்டி, "உலகம் முழுவதும் ஒளியை பரப்ப எப்போதும் தயாராக இருந்த மாணவர்களில் நரேந்திராவும் ஒருவர்... அவர் எப்போதும் அதற்குத் தயாராக இருந்தார்" என்று சொல்லி பெருமிதம் தெரிவித்துள்ளார்... வைரலாகி கொண்டிருக்கும் அந்த போட்டோவில், ஆசிரியர் - மாணவர் இருவரின் முகத்திலும் சந்தோஷம், பீறிட்டு நிரம்பி தளும்பி வழிந்து கொண்டிருக்கிறது..!












Click it and Unblock the Notifications