வாடகை காரில் டிராவல் செய்றீங்களா? 84% டிரைவர்கள் புக்கிங்கை கேன்சல் பண்ண இதுதான் காரணம்!
டெல்லி: இந்தியாவில் ஆப் மூலமாக வாடகைக்கு கார் ஓட்டும் டிரைவர்கள் புக்கிங்கை கேன்சல் செய்ய பெரும்பாலும் இரண்டே இரண்டு காரணங்கள்தான் இருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஓலா, உபேர் போன்ற செயலிகளை பயன்படுத்தி வாடகை கார்களில் பயணிக்கும் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்துள்ளது. டெல்லி, பெங்களூர், சென்னை, கொல்கத்தா போன்ற பெருநகரங்கள் மட்டும் இன்றி அதற்கு அடுத்த நிலை கொண்ட நகரங்களிலும் வாடகை கார் சேவையை இந்த நிறுவனங்கள் அளித்து வருகின்றன. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த செயலிகளை பயன்படுத்தி புக்கிங் செய்து பயணித்து வருகிறார்கள்.

நாம் செல்ல வேண்டிய இடத்தில் இந்த செயலிகளில் குறிப்பிட்டால் பக்கத்தில் இருந்து வாடகை கார் ஓட்டுநர்களுக்கு அலர்ட் செய்து புக்கிங்கை எடுத்துக் கொள்ள வைக்கிறது. எனினும், புக்கிங் ஆன பிறகு செல்ல வேண்டிய இடம், வாடகை எப்படி ரொக்கமாக கொடுப்பீர்களா அல்லது செயலி மூலமாக கொடுப்பீர்களா? என பல கேள்விகளையும் எழுப்பும் டிரைவர்கள் புக்கிங்கை ரத்து செய்வதையும் காண முடிகிறது.
பயணிகளும் ரத்து செய்தாலும் வாடகை கார் ஓட்டுநர்களும் ரத்து செய்கிறார்கள். சமீப காலமாக இப்படி புக்கிங்களை கேன்சல் செய்யும் போக்கு அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக லோக்கல் சர்வீஸ் என்ற ஆய்வு நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் 276 மாவட்டங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
செயலிகளை பயன்படுத்தி புக்கிங் செய்து பயணிக்கும் பயணிகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்கு 44 ஆயிரம் பேர் பதிலளித்துள்ளனர். இதில் முதல் கேள்வியாக ஆப் டேக்சிகளில் நீங்கள் எதிர்கொள்ளும் மேஜர் பிரச்சினை என்ன என்று கேட்டுள்ளார்கள்.. இதற்கு 4 ல் 3 பேர் டிரைவர்கள் பயணத்தை ரத்து செய்வதுதான் நாங்கள் சந்திக்கும் பெரும் பிரச்சினையே என்று கூறியிருக்கிறார்கள்.
கட்டண உயர்வு, நீண்ட நேரம் காத்திருப்பது, வண்டி தூய்மை இல்லாமல் இருப்பது, பாதுகாப்பு பிரச்சினை ஆகியவற்றையும் சொல்லியிருக்கிறார்கள். அடுத்த கேள்வியாக நீங்கள் புக்கிங் செய்த பிறகு டிரைவர் எப்போது பயணத்தை ரத்து செய்தார் அல்லது பயணத்தை ரத்து செய்திடுமாறு கோரிக்கை வைத்தார் என்ற கேள்விக்கு 37 சதவிகிதம் பேர், செல்ல வேண்டிய இடத்தை தெரிந்து கொண்ட பின்னரும், 5 சதவிகிதம் பேர் வாடகை எப்படி செலுத்துவீர்கள் எனக் கேட்டு தெரிந்து கொண்ட பின்னரும் 42 சதவிகிதம் பேர் முன் சொன்ன இரண்டு காரணங்களையும் சொல்லியிருக்கிறார்கள். 9 சதவிதம் பேர் பிற காரணங்களை சொல்லியிருக்கிறார்கள்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications