என்னை தீவிரவாதி போல நடத்துகிறார்கள்.. போதும் விட்டுவிடுங்கள்.. சுஷாந்த் காதலி ரியா கண்ணீர்..உருக்கம்
டெல்லி: என்னை தீவிரவாதி போல நடத்துகிறார்கள், நான்தான் சுஷாந்த் சிங் மரணத்திற்கு காரணம் என்று பொய்யான செய்திகளை, விஷயங்களை இரக்கமே இன்றி பரப்புகிறார்கள் என்று ரியா சக்ரபோர்த்தி தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14ம் தேதி தனது மும்பை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். முதல் நாள் நண்பர்களுடன் பார்டி கொண்டாடியவர், மறுநாளே இரவோடு இரவாக தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் சுஷாந்த் சிங் மரணத்திற்கு அவரின் காதலி ரியா சக்ரபோர்த்திதான் காரணம் என்று புகார்கள் வைக்கப்பட்டுள்ளது. ரியா கொடுத்த அழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள். அதன்படி சுஷாந்த் சிங்கிடம் இருந்து 15 கோடி ரூபாய் வரை ரியா முறைகேடு செய்து பெற்று இருக்கிறார் என்று புகார் உள்ளது.

சிபிஐ விசாரணை
இந்த நிலையில் ரியா சக்ரபோர்த்தி வடஇந்திய ஊடங்களுக்கு இது தொடர்பாக பேட்டி அளித்துள்ளார். தற்போது சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கும் ரியா, தான் அதிக அளவில் மன கஷ்டங்களை அனுபவித்து வருவதாக கூறியுள்ளார். அவர் தனது பேட்டியில், நான் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். என்னால் இதை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அப்பா தவறாக பேசுகிறார்
நான் சுஷாந்த்தை விரும்பினேன்.நான் அவரை உடன் இருந்து பார்த்துக் கொண்டேன். அந்த மனித தன்மை கூட யாருக்கும் இல்லை. அவரின் அப்பா கூட என்னை பற்றி தவறாக பேசுகிறார். எனக்கு மிக மிக கஷ்டமாக இருக்கிறது. நானும் என்னுடைய குடும்பமும் மிக மோசமான பாதிப்புகளை சந்தித்து உள்ளோம்.

பெரிய ரவுடிகள்
என் வீட்டிற்கு வெளியே என்னை தாக்க எப்போதும் ஒரு கூட்டம் உள்ளது. நானும், என் குடும்பமும் மிகுந்த பயத்தோடு வாழ்ந்து வருகிறோம். என் குடும்பத்தை ஏன் இப்படி தொல்லை செய்கிறீர்கள். சிபிஐ விசாரணை முடிவுகள் வரும் வரை ஏன் உங்களால் காத்திருக்க முடியவில்லை. எனக்கு சிபிஐ விசாரணை மீது நம்பிக்கை உள்ளது.

நம்பிக்கை உள்ளது
சிபிஐ விசாரணை மீது நம்பிக்கை இருப்பதால்தான் நாங்கள் உயிரோடு இருக்கிறோம். இல்லையென்றால் நாங்கள் தற்கொலை செய்து இருப்போம். என் அப்பா ராணுவத்தில் வேலை பார்த்தவர். 25 வருடம் என் அப்பா ராணுவத்தில் இருந்தார். ஆனால் இப்போது எங்களை தீவிரவாதிகளை போல நடத்துகிறார்கள். நான் இதுவரை என் வாழ்க்கையில் போதை பொருட்களை எடுத்துக்கொண்டது கிடையாது.

தீவிரவாதி போல நடத்துகிறார்கள்
எந்த போதை பொருள் டீலரிடம் நான் இதுவரை பேசியது கிடையாது. ஆனால் நான் எதோ போதை பொருள் அசாமி போல பார்க்கிறார்கள். நான்தான் சுஷாந்திற்கு போதை பொருள் கொடுத்தேன் என்று பொய்யான செய்தியை பரப்புகிறார்கள். என்னுடைய ரத்தத்தை வேண்டுமானால் சோதனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். நான் போதை பொருள் பயன்படுத்தியதே இல்லை, என்று ரியா சக்ரபோர்த்தி தெரிவித்துள்ளார்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications