Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீளும் மணிப்பூர்.. 4 மாதம் கழித்து இன்று மீண்டும் மொபைல், இணைய சேவை! முதலமைச்சர் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

இம்பால்: மணிப்பூரில் மே 3 ஆம் தேதி இன வன்முறை வெடித்ததையடுத்து நிறுத்தப்பட்ட செல்போன், இணைய சேவைகள், இன்று முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் தெரிவித்து உள்ளார்.

மணிப்பூர் தலைவர் இம்பாலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "பொய் செய்திகள், பிரச்சாரம் மற்றும் வெறுப்பு பேச்சுக்கள் பரவுவதைத் தடுக்க அரசு மே 3 ஆம் தேதி மொபைல், இணைய சேவைகளை நிறுத்தியது. தற்போது சூழ்நிலை மேம்பட்டு உள்ளதால், இன்று முதல் மாநிலம் முழுவதும் மொபைல் மற்றும் இணைய சேவைகள் மீண்டும் தொடங்கப்படும்.

Suspended Cell phone and internet services in Manipur will resume from today - CM Biren singh

அரசு "சட்டவிரோத குடியேறிகள்" வருகையை தொடர்ந்து கையாளும். இந்தியா - மியான்மர் எல்லை முழுவதும் வேலி அமைத்து எல்லை தாண்டுவதை தடுக்க வேண்டும். மணிப்பூரில் 60 கிமீ சர்வதேச எல்லையில் வேலி அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது ஏற்பட்டு உள்ள சூழ்நிலை, முந்தைய அரசுகளின் திட்டமிடப்படாத கொள்கைகளின் விளைவாகும், அண்மையில் எடுக்கப்பட்ட எந்த முடிவின் தாக்கமும் இல்லை. இலவச நகர்வு முறையை ரத்து செய்யுமாறு எங்கள் அரசு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கோரியுள்ளது. மேலும், பாதுகாப்புப் படையினர் எல்லையை முறையாகக் காவல் காக்கவில்லை.

அவர்கள் எல்லையில் ஜீரோ பாயிண்டில் நிறுத்தப்படுவதற்குப் பதிலாக, இந்திய எல்லைக்குள் 14 - 15 கிமீ தொலைவில் எல்லையைப் பாதுகாத்து வருவது கண்டறியப்பட்டு உள்ளது. எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை எதிர்த்து நடத்தப்படும் மோசமான விமர்சனங்கள், துஷ்பிரயோகங்களை கண்டிக்கிறேன்.

இது மக்களை உண்மையான பிரச்சினைகளில் இருந்து திசைதிருப்பி, நம்மிடையே மோதலை உருவாக்குகிறது. கடந்த இரண்டு மாதங்களில், பாதுகாப்புப் படைகள் பாதிக்கப்பட்ட பகுதிகள், பதற்றமான குவிக்கப்பட்டதால் சூழ்நிலை மேம்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு சம்பவங்களும் குறைந்துள்ளன.

மாநிலத்தின் இளைஞர்களிடையே போதைப் பொருள் பயன்பாடு மற்றும் போதைப் பொருள் கடத்தல் அதிகரித்துள்ளதாக நாடு தழுவிய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இதன் காரணமாகவே 2018 ஆம் ஆண்டில் எங்கள் அரசு போதைப்பொருள் மீதான போரைத் தொடங்கியது. இது தொடரும். மலைகளில் உள்ள அபின் தோட்டங்களை அழிக்கும் பணிகள் தீவிரமாக நடத்தப்படும்.

போலீசாரைப் போல் நடித்து மோசடி செய்யும் பேர்வழிகள் பணம் பறித்தல், கடத்தல் மற்றும் பிற குற்றங்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. சட்டவிரோத குடியேறிகள் வருகையை கையாளுதல், உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கான நலத் திட்டங்களை மேற்கொள்ளுதல் மற்றும் அபின் சாகுபடியை எதிர்த்துப் போராடுதல் ஆகியவையே மாநிலத்தில் உள்ள உண்மையான பிரச்சினைகள். அவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

சூரசந்த்பூர், கங்போகி, மோரே மற்றும் இம்பாலில் சட்டத்தை நிலைநாட்டும் நோக்கத்துடன், எங்கள் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது." என்றார். கடந்த மே மாதம் 3 ஆம் தேதி மணிப்பூரில் இன கலவரம் வெடித்ததில் 175-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர்.

பழங்குடி மக்களின் கோரிக்கையை ஆதரித்து மலை மாவட்டங்களில் 'பழங்குடி பேரணி'க்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மணிப்பூரின் பெரும்பான்மை மக்களான மெய்தேய் சமூகத்துக்கு பழங்குடி அந்தஸ்து அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் பேரணி நடத்தப்பட்டது.

மணிப்பூரின் மொத்த மக்கள் தொகையில் 53 சதவீதம் வசிக்கும் மெய்தேய் இனத்தவர்கள் பெரும்பாலும் இம்பால் பள்ளத்தாக்கில் வசித்து வருகின்றனர். நாகா மற்றும் குக்கி உள்ளிட்ட பழங்குடி மக்கள் மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதம் ஆவார்கள். இவர்கள் பெரும்பாலும் மலை மாவட்டங்களில் வசிப்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+