நாடாளுமன்றத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் இரவு முழுவதும் விடிய விடிய போராட்டம்!
டெல்லி: லோக்சபா, ராஜ்யசபாவில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள் தங்கள் மீதான நடவடிக்கைக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே இரவு முழுவதும் விடிய விடிய போராட்டம் நடத்தினர்.
Recommended Video
நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்ததாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மொத்தம் 24 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதில் திமுகவின் 6 எம்.பி.க்களும் அடங்குவர். லோக்சபாவில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள் நடப்பு மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் சபை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ராஜ்யசபாவில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள், ஒரு வாரம் சபை நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாது.

இதனிடையே எம்.பி.க்கள் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிராக நேற்று இரு சபைகளிலும் எதிர்க்கட்சிகள் பிரச்சனையை எழுப்பினர். மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் 50 மணிநேர தொடர் போராட்டத்தை நேற்று முற்பகல் 1 தொடங்கினர். இந்த எம்.பி.க்கள் நேற்று இரவு முழுவதும் காந்தி சிலை அருகே அமர்ந்து போராட்டம் நடத்தினர். தங்கள் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பதாகைகளுடன் அங்கேயே அமர்ந்து உறங்கினர்.
#WATCH | Delhi: The 50-hour long day-night protest of suspended MPs continues at the Gandhi statue at Parliament.
— ANI (@ANI) July 28, 2022
(Video Source: Opposition MP) pic.twitter.com/F2Tpu6q8WU
இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் மன்னிப்பு கேட்டு சபைகளில் பதாகைகளை காட்ட மாட்டோம் என உறுதியளித்தால்தான் சஸ்பெண்ட் நடவடிக்கையை சபை தலைவர்கள் ரத்து செய்ய முடியும். கொரோனா பாதிப்பில் இருந்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டு வந்ததும் விலைவாசி உயர்வு பிரச்சனை குறித்து விவாதிக்க தயார் என்றார்.

இதற்கு பதிலளித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரைன், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி டிவியில் எங்களுக்கு அட்வைஸ் செய்து வருகிறார். அமைச்சர் அவர்களே நீங்கள் உங்கள் வீட்டில் நன்றாக ஓய்வெடுங்கள் என கிண்டலடித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications