காலில் விழுந்த 125 வயது சிவானந்தா..பதிலுக்கு வணங்கிய பிரதமர்..விருதுகள் வழங்கும் விழாவில் நெகிழ்ச்சி
டெல்லி : டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், 125 வயதான யோகா ஆசிரியரான சுவாமி சிவானந்தா திடீரென பிரதமர் நரேந்திர மோடியின் காலில் திடீரென விழுந்து வணங்கிய நிலையில், பிரதமரும் அவரது காலில் விழுந்து வணங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றது.
குடியரசு தின விழாவை முன்னிட்டு மத்திய அரசு இந்தியாவின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் குறித்த பட்டியலை கடந்த ஜனவரி மாதம் 2வது வாரத்தில் வெளியிட்டது.
இந்தாண்டு 128 பேருக்கு பத்ம விருதுக்கு தேர்வு பெற்றுள்ளதாகவும், அதில் 4 பேருக்கு பத்மவிபூஷண் விருதும், பத்ம பூஷண் விருதுக்கு 17 பேரும், பத்மஸ்ரீ விருதுக்கு 107 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

பத்ம விருதுகள் 2022
பல்வேறு காரணங்களால், இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கினார். இதுகுறித்து ராஷ்டிரபதி பவன் வெளியிட்ட அறிக்கையில், ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் விழாவில், குடியரசுத்தலைவர் 2 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 54 பத்மஸ்ரீ விருதுகளை வழங்குவார் என்றும் மற்ற விருதுகள் வருகிற 28ஆம் தேதி நடைபெறும் விழாவில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

யோகா குரு சுவாமி சிவானந்தா
இன்று குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு பத்ம விருதுகளை வழங்கினார். மறைந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்துக்கு அறிவிக்கப்பட்ட பத்ம விபூசன் விருது அவரது மகள்களிடம் வழங்கப்பட்டது. இதேபோல் 125 வயதான யோகா பயிற்சியாளர் சுவாமி சிவானந்தா அவர்களுக்கு யோகா துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக திங்களன்று பத்மஸ்ரீ விருது பெற்றார். சிவானந்தா நாட்டின் வரலாற்றில் பத்ம விருது வென்றவர்களில் மிக வயதானவரான இவர் 'யோக் சேவக்' என்று வர்ணிக்கப்படுகிறார்.

காலில் விழுந்து வணக்கம்
இந்நிலையில் டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், 125 வயதான யோகா ஆசிரியரான சுவாமி சிவானந்தா திடீரென பிரதமர் நரேந்திர மோடியின் காலில் திடீரென விழுந்து வணங்கிய நிலையில், பிரதமரும் அவரது காலில் விழுந்து வணங்கினார். மேலும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அவையில் இருந்த அணைவரையும் வணங்கும் வகையில் தரையில் முழங்காலிட்டு சுவாமி சிவானந்தா வணங்கினார்.

மிக மூத்தவர்
சுவாமி சிவானந்தா பெஹல்லாவில் பிறந்தவர். சுவாமி சிவானந்தாவின் பாஸ்போர்ட் மற்றும் ஆதார் அட்டையில் உள்ளபடி அவரது வயது 125. ஆனால் அவர் கன்னங்களில் தோல் சுருக்கத்தைக் காணமுடியவில்லை. அவர் 50 ஆண்டுகள் இளையவராய்த் தெரிகிறார். உண்மையில், அவர் அப்போது கின்னஸ் சாதனைக்குச் சொந்தக்காரராக இருந்த ஜப்பான் நாட்டின் ஜிரொமோன் கிமுரா விடச் சுமார் ஐந்து ஆண்டுகள் மூத்தவர் ஆவார்.












Click it and Unblock the Notifications