டெல்லியில் டென்ஷன்:கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி போராட்டம்- பாஜக அலுவலகத்தை முற்றுகையிட போலீஸ் தடை!
டெல்லி: டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மிக் கட்சித் தலைவர்கள் முற்றுகையிடுவதைத் தடுக்கும் வகையில் ஆம் ஆத்மி அலுவலகம் வெளியே 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்தடையை மீறும் வகையில் கெஜ்ரிவால் தலைமையில் டெல்லியில் ஆம் ஆத்மியினர் போராட்டம் நடத்தினர்.
டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவர்- ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பி ஸ்வாதி மாலிவால் தம்மை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளர் தாக்கியதாக புகார் தெரிவித்தார். இந்தப் புகார் பெரும் பரபரப்பை கிளப்பியது. இதனை பாஜக கையில் எடுத்து ஆம் ஆத்மிக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.

இதனையடுத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டது. மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளர் பிபவ் குமார் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். இது ஆம் ஆம் ஆத்மி கட்சியினரை கொந்தளிக்க வைத்தது.
இது தொடர்பாக வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடி அவர்களே! மே 20-ந் தேதி பிற்பகல் 12 மணிக்கு ஆம் ஆத்மி கட்சியின் எம்பி, எம்.எல்.ஏக்களுடன் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட வருகிறோம். ஆம் ஆத்மியை அழிக்க நினைக்கிற பிரதமர் மோடி அவர்களே! எங்களது கட்சித் தலைவர்களை முடிந்தால் சிறையில் அடைத்து பாருங்கள்! ஏற்கனவே ஆம் ஆத்மி தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இப்போது என் உதவியாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி கட்சியினர் அத்தனை பேரையும் சிறையில் தள்ள முயற்சிக்கிறார் மோடி என ஆவேசமாக சவால் விடுத்திருந்தார்.
#WATCH | Aam Aadmi Party (AAP) leaders and workers hold a protest against the BJP, in Delhi
— ANI (@ANI) May 19, 2024
Delhi CM and AAP national convener Arvind Kejriwal is also present. pic.twitter.com/ZRqCWOBBO4
இதனைத் தொடர்ந்து இன்று காலை முதலே டெல்லி ஆம் ஆத்மி தலைமை அலுவலகம் நோக்கி அக்கட்சியினர் திரண்டனர். அதேநேரத்தில் ஆம் ஆத்மி அலுவலகம் அருகே போலீசாரும் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டனர். அப்போது, ஆம் ஆத்மி அலுவலகத்துக்கு வெளியே 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பாஜக தலைமை அலுவலகம் நோக்கி பேரணியாக செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என போலீசார் ஒலிபெருக்கிகளில் அறிவித்துக் கொண்டே இருந்தனர்.
#WATCH | Delhi Police make announcements outside the AAP party office. The police say that section 144 has been imposed in the area and there is no permission for protest as AAP leaders and workers march towards the BJP HQ against the arrest of its party leaders. pic.twitter.com/fGGlhJFBgH
— ANI (@ANI) May 19, 2024
ஆனாலும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி தொண்டர்கள் ஒன்று திரண்டு பாஜக தலைமை அலுவலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆம் ஆத்மி அலுவலகம் முன்பாகவே அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தால் டெல்லியில் பதற்றம் நீடித்தது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications