டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து தலீபான்கள் கருத்து.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆப்கானிஸ்தான் நாட்டின் வளர்ச்சி நிதி தொகுப்பிற்காக ரூ. 200 கோடி ஒதுக்கியுள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: 2023-24 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை கடந்த 1 ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், ஆப்கானிஸ்தான் நாட்டின் வளர்ச்சி நிதி தொகுப்பாக ரூ. 200 கோடி ஒதுக்கப்பட்டது. இதற்கு தலீபான்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

2023-24 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை கடந்த 1 ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

அதேபோல், ஆப்கானிஸ்தான் நாட்டின் வளர்ச்சி நிதி தொகுப்பாக ரூ. 200 கோடி ஒதுக்கப்படுவதாகவும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது. இதற்கு தலீபான்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Replacing old political vehicle.. சாரி சாரி! நிர்மலா சீதாராமனின் டங் ஸ்லிப் ஆனதால் அவையில் சிரிப்பலைReplacing old political vehicle.. சாரி சாரி! நிர்மலா சீதாராமனின் டங் ஸ்லிப் ஆனதால் அவையில் சிரிப்பலை

 இந்தியா - தலீபான்கள் உறவு

இந்தியா - தலீபான்கள் உறவு

ஆப்கானிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே அஷ்ரப் கானி ஆட்சி காலத்தின் போது இடையெ நல்லுறவு இருந்தது. ஆப்கானிஸ்தானில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கும் இந்தியா நிதி உதவி செய்தது. ஆனால் கடந்த 2021 ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு இந்தியா - தலீபான்கள் இடையேயான உறவு பாதிக்கப்பட்டது. இந்திய உதவியுடன் தொடங்கப்பட்ட பல திட்டங்களும் நிறுத்தி வைக்கப்பட்டன.

 தலீபான்கள் வரவேற்பு

தலீபான்கள் வரவேற்பு

இத்தகைய சூழலில், தான் ஆப்கானிஸ்தானுக்கு வளர்ச்சி நிதி தொகுப்பாக ரூ. 200 கோடியை இந்தியா அறிவித்துள்ளது. தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு அந்த நாட்டிற்கு இரண்டாவது ஆண்டாக இந்தியா நிதி உதவியை அறிவித்துள்ளது. பட்ஜெட்டில் ஆப்கானிஸ்தானுக்கு வளர்ச்சி நிதி தொகுப்பை அறிவித்தற்கு ஆப்கானிஸ்தான் வரவேற்பு தெரிவித்துள்ளது.

 நாங்கள் பாராட்டுகிறோம்

நாங்கள் பாராட்டுகிறோம்

இது தொடர்பாக தலீபான்களின் பேச்சுவார்த்தை குழுவில் இடம் பெற்று இருந்த சுஹைல் ஷாகீன் கூறுகையில், "ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிக்காக இந்தியா அளிக்கும் ஆதரவை நாங்கள் பாராட்டுகிறோம். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேம்படவும் நம்பிக்கை அதிகரிக்கவும் இந்த நிதி உதவும். ஆப்கானிஸ்தானில் பல்வேறு திட்டங்களுக்கு இந்தியா நிதி உதவி அளித்து வருகிறது. இந்தியா இந்த திட்டங்களுக்கான நிதி உதவியை மீண்டும் அளிக்க தொடங்கினால் அவநம்பிக்கை நீங்கி இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு வலுப்படும்" என்றார்.

 வரி விகிதங்கள் மாற்றி அமைப்பு

வரி விகிதங்கள் மாற்றி அமைப்பு

ரூ.7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி இல்லை என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் விவசாயிகள், பெண்கள், முதியோருக்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பட்ஜெட்டில் சில முக்கிய பொருட்களின் வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. இதனால், தங்கம், பிளாட்டினத்தில் தயாரிக்கப்படும் நகைகள் வெள்ளி பொருட்கள், சிகரெட் ஆகிய பொருட்களின் விலை கூட உள்ளது. அத்போல், செல்போன்கள், டெலிவிஷன் பெட்டிகள், செயற்கை வைரம் ஆகியவைகளின் விலை குறையும் என தெரிகிறது.

 ஆப்கானிஸ்தானில் கட்டுப்பாடுகள்

ஆப்கானிஸ்தானில் கட்டுப்பாடுகள்

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு பெண்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன்றன. பெண்கள் உயர் கல்வி கற்க தடை, பொது இடங்களில் தலை முதல் கால் வரை மறைக்கும் விதமாக உடை உடுத்த வேண்டும். என்.ஜி.ஓக்கள் பெண்கள் பணியாற்ற தடை என அடுத்தடுத்து பல்வேறு கட்டுப்படுகளை தலீபான்கள் விதித்து வருகின்றனர். தலீபான்கள் இந்த நடவடிக்கைகளுக்கு சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள் எழுந்தது. ஆப்கானிஸ்தானுக்குள்ளும் மக்களிடம் எதிர்ப்புகளையும், கடுமையான விமர்சனங்களையும் தூண்டியது.

English summary
Union Finance Minister Nirmala Sitharaman presented the budget for the financial year 2023-24 on the 1st. In this budget, Afghanistan's development fund package is Rs. 200 crore has been allocated. The Taliban have welcomed this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X