டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தேசிய கொடியை ப்ரபைல் படமாக வைக்க வேண்டும்! பிரதமரின் கோரிக்கையை ஏற்ற மோலிவுட்! கேட்காத கோலிவுட்?

Google Oneindia Tamil News

டெல்லி : 75வது சுதந்திர தினத்தை ஒட்டி சமூக வலைதளங்களில் தங்கள் முகப்பு படமாக தேசிய கொடியை வைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்த நிலையில் அதனை ஏற்று இந்தி, மலையாள திரையுலக நடிகர்கள் ப்ரொபைல் போட்டோக்களை மாற்றிய நிலையில் பெரும்பாலான தமிழ் நடிகை, நடிகர்கள் அதனை புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது.

200 ஆண்டுகளுக்கு மேலாக ஆங்கிலேயர்கள் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியா பல்வேறு தியாகங்கள் போராட்டங்களுக்குப் பிறகு சுதந்திரம் பெற்றது. இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் அதனை ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் அதாவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்து அதற்கான பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டு வருகிறது அதன் தொடர்ச்சியாக இந்தியா முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

பீகார்:7 கட்சிகளின் 164 எம்எல்ஏக்கள் ஆதரவு-ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிதிஷ்குமார் அறிவிப்புபீகார்:7 கட்சிகளின் 164 எம்எல்ஏக்கள் ஆதரவு-ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிதிஷ்குமார் அறிவிப்பு

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

இந்த நிலையில் நாட்டு மக்களிடையே வானொலி மூலம் உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூலை 31ஆம் தேதி 91 வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசினார் அப்போது சுதந்திர தின அமுதப் பெருவிழா மக்கள் பேரியக்கமாக வடிவெடுத்து இருப்பதை பார்க்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது எனவும், சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவின்படி ஆகஸ்ட் மாதம் 13 முதல் 15 வரை இல்லந்தோறும் மூவண்ணக்கொடி என்ற ஒரு சிறப்பு இயக்கத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

 75வது சுதந்திர தினம்

75வது சுதந்திர தினம்

இந்த இயக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டு, ஆகஸ்ட் மாதம் 13 முதல் 15 வரை, நீங்களும் உங்கள் இல்லங்களில் மூவண்ணக் கொடியைப் பறக்க விடுங்கள், அல்லது அதை உங்கள் வீட்டில் ஏற்றுங்கள் என கோரிக்கை விடுத்தார். மேலும்," உங்களிடத்திலே எனக்கு மேலும் ஒரு கோரிக்கையும் உண்டு; அதாவது ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வரை, நீங்கள் அனைவரும் உங்களுடைய சமூக ஊடக சுயவிவரப் புகைப்படங்களில் ( ப்ரோபைல் போட்டோ) மூவர்ணக் கொடியை பதிவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

ப்ரோஃபைல் பிக்சர்

ப்ரோஃபைல் பிக்சர்

பிரதமரின் இந்த கோரிக்கையை ஏற்று நாடு முழுவதும் ஏராளமானோர் தங்களது பேஸ்புக் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகளில் தேசியக் கொடியை ப்ரொபைல் பிக்சராக மாற்றியுள்ளனர். இதே போல பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று கேரளாவில் பெரும் நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் ,சுரேஷ்கோபி, இசையமைப்பாளர் கீரவாணியும், பாலிவுட் அக்ஷய்குமார், அஜய் தேவ்கான் உள்ளிட்ட பல பிரபல நடிகர்கள் தங்கள் ப்ரொபைல் பிச்சர்களை மாற்றியுள்ளனர்.

 தமிழ் நடிகர்,நடிகைகள்

தமிழ் நடிகர்,நடிகைகள்

அதே நேரத்தில் தமிழகத்தைப் பொறுத்தவரை பெரும்பாலான நடிகர்கள் தங்கள் முகப்பு படங்களை மாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதுள்ள சூழலில் நடிகர் தனுஷின் சகோதரரும் பிரபல இயக்குனருமான செல்வராகவன், தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் உள்ளிட்ட சிலர் மட்டுமே தங்களது சமூக வலைதள கணக்குகளில் புரொஃபைல் பிக்சர்களை மாற்றியுள்ளனர். பெரிய நடிகர் நடிகைகள் யாரும் பிரதமரின் கோரிக்கையை கண்டு கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விஷயம் தான் தற்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

English summary
On the occasion of the 75th Independence Day, when Prime Minister Narendra Modi demanded that the national flag be placed as their profile image on social media, Hindi and Malayalam actors have changed their profile photos, and most of the Tamil actresses and actors have ignored it., தேசிய கொடியை ப்ஃரோபைல் படமாக வைக்க வேண்டுமென்ற பிரதமரின் கோரிக்கையை புறக்கணித்த தமிழ் நடிகர் நடிகைகள்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X