"தமிழ்" இந்தியாவின் பெருமை! காசி தமிழ் சங்கமம் நடத்த வாரணாசி ஆவலுடன் உள்ளது.. பிரதமர் மோடி புகழாரம்
டெல்லி: தமிழ் இந்தியாவின் பெருமை என்றும் காசி தமிழ் சங்கமத்தை நடத்துவதற்கு காசி நகரம் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளது என்றும் பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமராக மோடி பதவியேற்றது முதல் மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில், மன் கி பாத் எனும் நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். வானொலி வாயிலாக ஒலிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு முக்கிய தகவல்களை நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்வார்.

இந்த மாதத்திற்கான மன் கி பாத் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 30) ஒலிபரப்பானது. பிரதமர் மோடியின் 128 வது மன் கி பாத் நிகழ்ச்சி இதுவாகும். மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
இந்தியாவின் 2 மிகப் பழமையான நகரங்களின் சங்கமம் எப்போதும் சிறப்பு வாய்ந்தது. நான் காசி தமிழ் சங்கமம் பற்றிப் பேசுகிறேன். 4-வது காசி தமிழ் சங்கமம் வருகிற 2 ஆம் தேதி வாரணாசியில் தொடங்குகிறது. இந்த ஆண்டு கருப்பொருள் மிகவும் சுவாரஸ்யமானது. அது "தமிழ் கற்க" என்பதாகும். காசி தமிழ் சங்கமம் தமிழ் மொழியை நேசிக்கும் அனைவருக்கும் ஒரு முக்கியமான தளமாக மாறியுள்ளது.
தமிழ் கலாச்சாரம் சிறந்தது. தமிழ் மொழி சிறந்தது. தமிழ் பாரதத்தின் பெருமை. விவசாயத் துறையில் இந்தியா மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. 357 மில்லியன் டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்து இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி 100 மில்லியன் டன் அதிகரித்துள்ளது.
இளைஞர்களின் அர்ப்பணிப்பையும், விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு உணர்வையும் பார்க்கும் ஒவ்வொரு முறையும் எனது இதயம் உற்சாகத்தால் நிரம்பி வழிகிறது. இளைஞர்களின் இந்த அர்ப்பணிப்பு, வளர்ச்சி இந்தியாவின் மிகப்பெரிய பலங்களில் ஒன்றாகும். வந்தே மாதரம் 150-வது ஆண்டு விழா, மத்திய மண்டபத்தில் அரசியல் அமைப்பு தினக் கொண்டாட்டம் மற்றும் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் உள்ள கோபுரத்தில் காவிக்கொடி ஏற்றப்பட்டது ஆகியவை இந்த மாதத்தில் நடந்த உத்வேககரமான முன்னேற்றங்களில் அடங்கும்.
அடுத்த மாதம் நாம் சந்திக்கும் போது 2025ம் ஆண்டு முடிவுக்கு வரும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குளிர் தீவிரமடையும். குளிர்காலத்தில் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் கவனமாக கவனித்துக் கொள்ளுங்கள்." இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து தனது எக்ஸ் தள பதிவில் பிரதமர் மோடி, "காசி தமிழ் சங்கமத்தை நடத்துவதற்கு காசி நகரம் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளது" என பதிவிட்டுள்ளார்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications