தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேருக்கு பத்ம விருதுகள்.. ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்.. யார் இவர்கள்?
டெல்லி ஜனாதிபதி மாளிகையில் 106 பேருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று வழங்கி கவுரவித்தார்
டெல்லி: தமிழ்நாட்டை சேர்ந்த இருளர் சமுதாயத்தை சேர்ந்த பாம்புபிடி வீரர்கள் 2 பேர் உள்பட 4 பேருக்கு பத்மஸ்ரீ விருதை இன்று ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார். அதேபோல் சமீபத்தில் மறைந்த பாடகி வாணி ஜெயராமுக்கும் பத்ம பூஷண் விருதும் வழங்கப்பட்டது. மொத்தம் 106 பேருக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று பத்ம விருதுகள் வழங்கிய நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் இந்த பட்டியலில் இடம்பெற்றிருந்தனர்.
இந்தியாவில் மிகவும் உயரிய விருதாக பத்ம விருதுகள் உள்ளன. பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ என மூன்று பிரிவுகளாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

குடியரசு தினத்தை முன்னிட்டு 2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டன. அதன்படி 3 பேருக்கு பத்ம விபூஷண், 9 பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 91 பேருக்கு பத்மஸ்ரீ என மொத்தம் 106 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன.
மொத்தம் 19 பெண்கள் உள்பட 106 பேர் பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று டெல்லி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு பத்ம விருதுகளை வழங்கினார். அப்போது தமிழ்நாட்டை சேர்ந்த இருளர் சமுதாயத்தை சேர்ந்த பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையான் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதை ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்.
மேலும் சமூக பணிகள் பிரிவில் தமிழ்நாட்டின் பாலம் கல்யாண் சுந்தரத்துக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி ஜனாதிபதி திரெளபதி முர்மு கவுரவித்தார். மேலும் பரதநாட்டியக் கலைஞர் கே கல்யாணசுந்தரம் பிள்ளை, மருத்துவ பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் கோபால்சாமி வேலுச்சாமி, பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. மேலும் சமீபத்தில் மறைந்த பாடகி வாணி ஜெயராமுக்கு பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டது.
-
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி












Click it and Unblock the Notifications