888.. லோக்சபா தொகுதிகளை அதிகரிக்க திட்டம்! தேயப்போகும் தென்மாநிலங்கள்? எச்சரிக்கும் கேடிஆர்
டெல்லி: மக்கள் தொகையை பெருக்கத்தை கட்டுப்படுத்தி வளர்ச்சியில் கவனம் செலுத்தி வரும் நிலையில் நாடாளுமன்ற தொகுதிகளை அதிகரிக்கும்போது பாரபட்சத்துடன் தென்மாநிலங்களுக்கு அநீதி ஏற்படலாம். இது நடந்தால் அனைவரும் சேர்ந்து எதிர்க்க வேண்டும் என தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகனும், அமைச்சருமான கேடி ராமராவ் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவில் புதிதாக நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இங்கு மக்களவை (லோக்சபா) மாநிலங்களை (ராஜ்யசபா) கூட்டத்துக்கான தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மக்களவையை பொறுத்தமட்டில் தற்போது 545 எம்பிக்கள் உள்னள. இதில் 2 பேர் ஆங்கிலோ இந்தியன் பிரதிநிதிகளாக இருக்கும் நிலையில் மீதமுள்ள 543 பேர் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்நிலையில் தான் புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்றத்தில் மக்களவை எம்பிக்களுக்கான இருக்கை என்பது 888 என அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் விரைவில் நாடாளுமன்ற எம்பிக்களின் எண்ணிக்கை 545 ல் இருந்து 888 ஆக அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.
தற்போதைய சூழலில் நாட்டில் 2026ம் ஆண்டு வரை எம்பிக்களின் எண்ணிக்கையில் மாற்றம் செய்ய முடியாத நிலை உள்ளது. இதற்கு மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு, அரசியல் சாசன திருத்தம் செய்தது தான் காரணம். இருப்பினும் 2026ம் ஆண்டுக்கு பிறகு எம்பிக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம். இதற்கு இன்னும் 3 ஆண்டுகள் உள்ள நிலையில் தற்போதே விவாதம் கிளம்பிவிட்டது.
அதாவது நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை எப்படி மத்திய அரசு அதிகரிக்கும் என்பது தான் தற்போது விவாதமாகி உள்ளது. அதாவது தென்னிந்தியா, வட இந்தியா மாநிலங்களுக்கான எம்பிக்கள் எண்ணிக்கையில் அதிக வேறுபாடு இருக்குமா? என்ற கேள்வி தான் பிரதானமாக எழுந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் மக்கள் தொகை தான். பொதுவாக நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை என்பது மக்கள்தொகையை பொறுத்து தான் உருவாக்கப்படும்.
அப்படி பார்த்தால் தென்இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் மக்கள் தொகை கட்டுப்படுத்தும் திட்டத்தை திறம்பட செய்துள்ளன. ஆனால் வடமாநிலங்களில் அப்படி இல்லை. இதனால் தென்மாநிலங்களை விட வடஇந்திய மாநிலங்களில் அதிகமான நாடாளுமன்ற தொகுதிகள் புதிதாக உருவாகலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகனும், தெலங்கானா மாநில தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சருமான கேடி ராமராவ் தென்மாநில அரசியல் கட்சிகளுக்கு ஒரு அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தென்மாநிலங்கள் அனைத்தும் ஒன்றாக இணைந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என பரபரப்பாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
2026ம் ஆண்டுக்கு பிறகு நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும்போது தென்மாநிலங்களுக்கு அநீதி ஏற்பட்டால் ஒன்றாக குரல் எழுப்ப வேண்டும். பொதுவாக தென் மாநிலங்களின் முற்போக்குக் கொள்கைகளுடன் செயல்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் தொகையை கட்டுப்படுத்தி வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறோம். ஆனால் வடமாநிலங்களில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறையின்போது வடமாநிலங்களுக்கு புதிய தொகுதிகள் அதிகமாக கிடைக்கலாம்.
இதன்மூலம் மக்களவையில் வடமாநிலங்களின் பிரதிநிதிகள் அதிகம் இருப்பார்கள். தெற்கே உள்ளவர்கள் குறைந்து காணப்படுவார்கள். மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அமல்படுத்துவது குறித்த மத்திய அரசின் ஆலோசனையை ஏற்று நாம் செயல்பட்டு வரும் இந்த வேளையில் நமக்கு குறைந்த தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால் அனைவரும் ஒருசேர குரல் கொடுக்க வேண்டும். மேலும் நாட்டின் மக்கள்தொகையில் வெறும் 18 சதவீதம் பேர் மட்டுமே தென்மாநிலங்களில் உள்ளனர். இருப்பினும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நாம் 35 சதவீதம் பங்களிக்கிறோம். நாட்டின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிக்கு பங்களிக்கும் இந்த முற்போக்கு மாநிலங்களை புறக்கணிக்க விடக்கூடாது'' என தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
Power cut: சென்னை உள்பட தமிழகத்தில் இரவு நேரத்தில் மின்வெட்டு ஏன்? ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் விளக்கம் -
கள உதவியாளர் தேர்வு: இனி 'ஷூ' அணிந்து கம்பம் ஏறலாம்! மின்வாரியத்தின் புதிய விதிகள்! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கேரள லாட்டரியில் ரூ.1 கோடி + 25 லட்சம்.. எர்ணாகுளத்திற்கு அடுத்தடுத்து பரிசு மழை! வின்னர் யார்?












Click it and Unblock the Notifications