டெல்லியில் தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.. மத்திய அரசுக்கு எதிராக கோஷம்.. பறந்துபோன 3 ‛டிமாண்ட்’

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசுக்கு எதிராக 3 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியில் தமிழக விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்பபாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது அவர்கள் கையில் நெற்கதிர்கள் மற்றும் பதாகைகளை வைத்தும், கோஷமிட்டும் மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நம் நாட்டில் மத்திய அரசு சார்பில் மரபணு திருத்தப்பட்ட பயிர்கள் அடுத்தடுத்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பருத்தி, நெல் உள்ளிட்ட மரபணு திரத்தப்பட்ட பயிர்கள் அறிமுகமாகி உள்ன. இதற்கு சில விவசாயிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மகசூல் நன்றாக கிடைக்கும் என்று சொல்லப்படுவதால் ஒரு தரப்பினர் ஆதரவாக உள்ளனர்.

delhi farmers tamil nadu

மறுபுறம் இன்னொரு தரப்பு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மரபணு திருத்தப்பட்ட பயிர்களை மத்திய அரசு கொண்டு வரக்கூடாது. அதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறிவருகின்றனர். தமிழகத்திலும் மரபணு திருத்தப்பட்ட பயிர்களுக்கு கடும் எதிர்ப்பு உள்ளது.

இதுதொடர்பாக பல்வேறு விவசாய அமைப்பினர் பத்திரிகையாளர் சந்திப்பிலேயே எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தான் தமிழக விவசாயிகள் சார்பில் டெல்லியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது விவசாயிகள் கையில் நெற்கதிர்கள் மற்றும் பதாகைகளை ஏந்தி இருந்தனர்.

அப்போது தமிழக விவசாயிகள் மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என கோஷமிட்டனர். அதோடு இந்தியாவில் 5,000 க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் நகரங்கள் உள்ளன. இந்த நெல் ரகங்கள் மட்டுமே வறட்சி மற்றும் காலநிலை மாற்றத்தை தாங்கி வளரும். இதனால் மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்களை திரும்ப பெற வேண்டும் என்று தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் 3 முக்கிய அம்சங்களை கொண்டிருந்தது. முதல் கோரிக்கை என்பது மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்களை திரும்ப பெற வேண்டும். 2வது கோரிக்கை மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் மற்றும் உணவு பொருட்களுக்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும். 3வது கோரிக்கை வனவிலங்குகளால் பாதிக்கப்பட்டமனித உயிர்கள் மற்றும் பயிற்களுக்கு இழப்பீடு வழங்கிட இந்திய அளவில் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+