Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்நாடகாவிற்கு சாதகம்? மேகதாது வழக்கை மாற்றிய கேள்வி.. தமிழக அரசுக்கு உச்ச நீதிமனறம் என்ன சொன்னது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கர்நாடக அரசு முன்மொழிந்துள்ள மேகதாது திட்டத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேகதாது திட்டத்திற்காகத் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான எதிர்ப்பை தமிழ்நாடு அரசு தெரிவித்து மனு தாக்கல் செய்திருந்தது. ஆனால் இந்தத் திட்டம் இன்னும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் மத்திய நீர்வள ஆணையத்தின் ஒப்புதலைப் பெறவில்லை என்கிற நிலையில், தமிழக அரசின் எதிர்ப்பு தவறானது என்றும், முதிர்ச்சியற்றது என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

காவிரியில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே மழை பெய்யாத காலங்களில் போதிய நீர் வரத்து இல்லாமல் இரு மாநிலங்களிலும் பிரச்சனை ஏற்படுகிறது. தண்ணீர் அதிகமாக ஓடும் காலத்தில் தேவைக்கு அதிகமான தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து பயன்படுத்தலாம் என்று கர்நாடகா விரும்பியது. இதன்படி கர்நாடகாவின் மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட போகிறோம் என்று அம்மாநில அரசு அறிவித்தது. மேலும் ரூ.14 ஆயிரம் கோடியில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், மத்திய நீர்வளத்துறை மற்றும் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த திட்டத்திற்கு இதுவரை மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை.

Tamil Nadu government s opposition in Mekedatu case is Totally misconceived Supreme Court

தமிழக அரசு வழக்கு

இந்நிலையில் மேகதாது திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்கு உபரி நீர் கிடைக்காது என கூறி இந்த அணை திட்டத்தை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசுக்கு திட்ட அறிக்கையை கர்நாடகா அரசு அனுப்பிய உடனேயே உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

கர்நாடகா திட்ட அறிக்கை

தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் கூறுகையில், "மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசு கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 18-ந் தேதி சமர்ப்பித்த விரிவான திட்ட அறிக்கையை நிராகரித்து, திருப்பி அனுப்ப மத்திய நீர்வள ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். மேலும் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இந்த அணை விவகாரம் தொடர்பான மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் விசாரித்து தீர்ப்பு அளிக்கும் வரையில், அணை தொடர்பாக அனுமதி கோரி கர்நாடக அரசு தாக்கல் செய்யும் எந்தவொரு விண்ணப்பத்தையும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் ஏற்க தடை விதிக்க வேண்டும்" இவ்வாறு கூறப்படடிருந்தது.

உச்ச நீதிமன்றம் விசாரணை

இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன், என்.வி.அஞ்சரியா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று மீண்டும் விசாரித்தது. அப்போது தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வக்கீல்கள் முகுல் ரோத்தகி, பி.வில்சன், ஜி.உமாபதி ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.

தமிழ்நாடு வாதம்

தமிழக அரசின் சார்பில் அவர்கள் வாதிடுகையில், "கர்நாடகா மேலணையில் உள்ள மாநிலம் ஆகும். அணை கட்டி, தமிழ்நாட்டிற்கான நீரின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்த முயற்சி செய்கிறது. நீரை விடுவிக்கும் சாவி கர்நாடகாவின் கையில் இருக்கும். மேகதாது அணை திட்டத்தால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இந்த அணை திட்ட விவகாரத்தில் உத்தரவு பிறப்பிக்க மத்திய நீர்வள ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை. மேகதாது அணை திட்ட விவகாரத்தில் புகார் அளித்தால் மட்டும் போதாது. திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்பதற்காகவே வழக்கு தொடர்ந்துள்ளோம். காவிரி தீர்ப்புக்கு எதிராக எந்தவொரு மாநிலமும் நீரை தடுத்து வைக்க முடியாது.

எப்படி தடுக்க முடியும்

50 ஆண்டுகளாக நீடிக்கும் காவிரி பிரச்சினையில் கர்நாடகத்தை எப்படி நம்ப முடியும்?. மேகதாது அணை பிரச்சினையை முளையிலே கிள்ளி எறிய விரும்புகிறோம். கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தீர்வாகாது. மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ளது. தீர்ப்பில் தெரிவித்தபடி நீரை பறிப்பதை ஏற்க முடியாது. உச்ச நீதிமன்ற அனுமதி இல்லாமல் கர்நாடக அரசு எதையும் செய்யக் கூடாது" என்று வாதிட்டனர். அப்போது நீதிபதிகள், "தமிழ்நாட்டிற்கான நீர் பங்கீட்டைப் பாதிக்காமல் கர்நாடகா அணை கட்டினால், தமிழ்நாடு அதை எப்படி எதிர்க்க முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்கள்.

கர்நாடகா வாதம்

கர்நாடகா அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் மற்றும் வழக்கறிஞர் ஜெனரல் சஷி கிரண் ஷெட்டி வாதிடுகையில், " மேகதாது திட்டம் இரண்டு முக்கிய நோக்கங்களுக்காக மட்டுமே அமைக்கப்படுகிறது. பெங்களூரு வேகமாக வளர்ந்து வரும் நகரத்தின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. 400 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய உள்ளோம். கர்நாடகா மேகதாது அணையில் சேமித்து வைக்கும் நீர், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி கர்நாடகாவிற்கு ஒதுக்கப்பட்ட சொந்தப் பங்கான காவேரி நீரைப் பயன்படுத்தியே இருக்கும். இந்த அணை கட்டப்படுவதால், தமிழ்நாட்டிற்கு உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ள 177 டி.எம்.சி. நீர் பங்கீடு எந்த விதத்திலும் தடைபடாது அல்லது பாதிக்கப்படாது. இது தமிழ்நாட்டிற்கான நீரின் ஓட்டத்தைத் தடை செய்யாது என்று கர்நாடகா வழக்கறிஞர்கள் உறுதியளித்தனர்.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம், மேகதாது திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை நிராகரித்தது. இந்த வழக்கில் தமிழ்நாட்டின் மனு "முற்றிலும் தவறானது என்றும் முதிர்ச்சியற்றது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், காவிரி நீர் பங்கீட்டில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க வல்லுநர் அமைப்புகளே சரியானவை என்றும் தீர்ப்பில் கூறியது.

தமிழக அரசுக்கு உள்ள வாய்ப்பு

மேகதாது திட்டம் குறித்த அனைத்து முடிவுகளையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் மத்திய நீர்வள ஆணையம் ஆகியவையே எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வலியுறுத்தினர். மேகதாது திட்டத்தின் விரிவாக அறிக்கையை மத்திய நீர்வள ஆணையம் பரிசீலிப்பதற்கு முன்பே, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் முன் அனுமதி கட்டாயம் பெற்றாக வேண்டும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

தமிழ்நாட்டிற்கான நீர் பங்கீடு குறித்த உத்தரவு

மேகதாது அணை கட்டப்பட்டாலும் இல்லாவிட்டாலும், உச்ச நீதிமன்றத்தின் 2018 ஆம் ஆண்டுத் தீர்ப்பின்படி நிர்ணயிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்குரிய 177 டி.எம்.சி. நீரைப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டியது கர்நாடகாவின் கட்டாய கடமை ஆகும். கர்நாடகா, நீதிமன்ற உத்தரவுகள் அல்லது காவிரி ஆணையத்தின் உத்தரவுகளை மீறிச் செயல்பட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக எச்சரித்தது.

எதிர்கால நடவடிக்கைகள் எப்படி இருக்க வேண்டும்

மேகதாது திட்டத்திற்குத் தனது எதிர்ப்பை, நீதிமன்றத்திற்குப் பதில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் அமைப்புகளிடம் முறையிடலாம் என்று தமிழ்நாட்டிற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. மேகதாது திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை மத்திய நீர்வள ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டால், அப்போது சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க இரு மாநிலங்களுக்கும் சுதந்திரம் உள்ளது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பில் கூறினார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+