களமிறங்கிய உதயநிதி.. திமுக அதிரடி பிளான்.. டெல்லியில் அமித்ஷா உடன் ஆர்என் ரவி முக்கிய மீட்டிங்
டெல்லி: நீட் தேர்வுக்கு விலக்கு கோரி நாளை திமுக போராட்டம் அறிவித்துள்ள நிலையில், டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என். ரவி இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க வாய்ப்பு உள்ளதாம்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவிக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே கடும் மோதல் போக்கு காணப்படுகிறது. திமுக அரசுக்கு எதிராக அடிக்கடி கருத்துக்களை ஆளுநர் ரவி தெரிவித்து வருகிறார்.

தமிழக அரசு சார்பில் நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்என் ரவி கிடப்பில் போட்ட நிலையில், அதுகுறித்து தமிழக முதல்வர் தொடர் கேள்வி எழுப்பி எழுப்பியதால் விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பி வைத்தார் ஆளுநர். அதன்பின்னர் மீண்டும் தமிழக அரசு சார்பில் நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது அனுப்பிவைக்கப்பட்டது. அந்த மசோதாவை அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். மத்திய அரசின் கருத்தினை பெற்று குடியரசு தலைவர் மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பதா வேண்டாமா என்று முடிவு செய்வார்.
இந்த சூழலில் கடந்த 12ம் தேதி சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்என் ரவி நீட் இளநிலை தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்று முதல் 10 மாணவியருடன் 100 மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது சேலத்தை சேர்ந்த மாணவர் ஒருவரின் தந்தை, நீட் தேர்வுக்கு எப்போது தடை விதிக்கப்படும்? என்ற கேள்வியை முன்வைத்தார்.
அதற்கு ஆளுநர் ஆர்என் ரவி, ‛‛நீட் தேர்வுக்கு விலக்கு கேட்பது என்பது மாணவர்களின் போட்டிபோடும் திறனை கேள்விக்குறி ஆக்கிவிடும். நீட் தேர்வுக்கு கோச்சிங் சென்டர் சென்று பயில வேண்டிய அவசியமில்லை. பள்ளிகளில் பாடம் நடத்தும் போதே நீட் தேர்வுக்கான பயிற்சி கொடுக்கலாம். நீட் தேர்வுக்கான விலக்கு அறிவுசார்ந்த மாணவர்களை மாற்றுத்திறனாளிகளாக மாற்றி விடும். எனவே எனக்கு அதிகாரம் இருந்தால் நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒருபோதும் ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட மாட்டேன். மேலும் கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு அனுப்பியுள்ளேன்" என தெரிவித்தார்.
ஆளுநர் ஆர்என் ரவியின் பேச்சு தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதுஒருபுறம் எனில் மறுநாள் சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்ற மாணவர் 2 முறை நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்தார். இதனால் மனம் உடைந்த ஜெகதீஸ்வரனின் தந்தையும் அடுத்த நாளே தற்கொலை செய்து உயிரை மாய்த்தார். இந்த சம்பவத்தை அடுத்து நீட் தேர்வுக்கு கண்டிப்பாக தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற பலரும் அழுத்தம் கொடுத்தனர்.
அதேநேரம் ஆளுநர் ஆர்என் ரவியின் கருத்துக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் திமுக இளைஞரணி சார்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கவர்னர் ஆர்என் ரவியை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நீட்டிற்கு எதிராக திமுக உண்ணவிரத போராட்டம் நடத்த உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று காலை 7 மணியளவில் திடீரென டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் தமிழ்நாடு இல்லத்துக்கு சென்று தங்கியு இருக்கும் அவர், முக்கிய பிரமுகர்கள் சிலரை சந்தித்துப் பேசுவார் என்று தகவல்கள் கூறுகின்றன.
குறிப்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று (சனிக்கிழமை) சந்தித்து, தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேச இருப்பதாக தெரிகிறது. நாளை மாலை டெல்லியில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி சென்னை திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications