இந்தியாவிலேயே டாப் மாநிலம்.. அற்புதம் நிகழ்த்திய தமிழ்நாடு.. மத்திய அரசு பட்டியலை பாருங்க
டெல்லி: இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் பெண் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்தியாவில் தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண் பணியாளர்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது- மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரத்தில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளது.
தொழில்துறையில் தமிழ்நாடு மிகச்சிறந்த மாநிலமாக திகழ்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர், நாமக்கல், விருதுநகர் போன்ற மாவட்டங்களில் அதிகப்படியான தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதுதவிர திண்டுக்கல், திருச்சி, விருதுநகர் போன்ற மாவட்டங்களிலும் கணிசமாக தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதுதவிர பரவலாக தமிழகம் முழுவதும் தொழிற்சாலைகள் உள்ளன.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு விஷயத்திற்கு தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது. சென்னையை எடுத்துக் கொண்டால் ஆட்டோமொபைல் துறையில் இந்தியாவின் டாப் நகரமாக திகழ்கிறது. இதேபோல் கோவை ஜவுளி, சிஎன்சி இயந்திரங்கள், பைப், கிரைண்டர், உள்ளிட்டபொருட்கள் உற்பத்தி அதிக அளவில் இருக்கும். திருப்பூரில் பின்னலாடை தொழிலும், ஈரோட்டில் ஜவுளி மற்றும் மஞ்சள் ஏற்றுமதி தொழிலும் தனித்துவம் ஆகும். விருதுநகர், சிவகாசியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலும் அதிகமாக உள்ளது.
இதேபோல் நாமக்கல் என்றால் கோழிப்பண்ணை மற்றும் முட்டையும், கரூரில் பஸ் பாடி கட்டும் தொழில்கள் மற்றும் ஸ்பின்னிங் மில்கள் அதிகமாக இருக்கும். வேலூர், ராணிப்பேட்டை பகுதிகளில் தோல் தொழிற்சாலைகள், காலணி தொழிற்சாலைகள் அதிக அளவில் இருக்கும். கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரில் சென்னைக்கு நிகராக ஆட்டோ மொபைல் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன. செல்போன் உற்பத்தி முதல் ஜவளி, பைப் உற்பத்தி, ஆட்டோ மொபைல் பாகங்கள் உற்பத்தி, கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளன.
இப்படி தொழில் வளர்ச்சியில் முன்னணியில் உள்ள தமிழகம் தான் இந்தியாவில் அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலமாக முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் 38,837 தொழிற்சாலைகள் உள்ளன.. இந்தியாவில் தொழிற்சாலைகளில் பெண் பணியாளர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டின் பெரும்பாலான தொழிற்சாலைகளில பெண் பணியாளர்கள் அதிக அளவில் வேலை செய்கிறார்கள். முழுக்க முழுக்க பெண்களே வேலை செய்யும் பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. பெண் தொழில் முனைவோர்களும் அதிக அளவில் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்..
மத்திய தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்ட 2019-20-ம் ஆண்டுக்கான தொழிற்துறை புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.. அந்த புள்ளி விவரப்படி, இந்திய அளவில் தொழிற்சாலைகளில் 15.80 லட்சம் பெண்கள் வேலை செய்கின்றனர். இவர்களில் 6.79 லட்சம் பேர் தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இந்திய அளவில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் மொத்த பெண் ஊழியர்களின் எண்ணிக்கையில் 43 சதவீதம் என்று கூறப்படுகிறது. அதேபோல், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை சொந்தமாக நடத்தும் பெண்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னையில் நடைபெற்ற, தொழிற்துறை விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற ஐடி துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், இந்தியாவில் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெண்களில் 10-ல் 4 பேர் தமிழ்நாட்டில் உள்ள நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் என்றார். தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றும் பெண்களின் மேம்பாட்டுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை வழங்கி வருகிறது என்றும் தெரிவித்தார். அரசு பேருந்துகளில் இலவச பயணம், அரசு பள்ளி மாணவிகளுக்கு கல்லூரிகளில் கல்வி கற்க மாதம் மாதம் உதவி தொகை, ஏழை மகளிருக்கு மாதம் மாதம் ஆயிரம் உதவி தொகை என பெண்களை முன்வைத்து தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
அட.. இதை கவனிச்சீங்களா? தமிழகத்திலேயே 2 குடும்பம் மட்டும்தான்! திமுகவில் களமிறங்கும் தந்தை - மகன்கள் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்! -
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம்












Click it and Unblock the Notifications