"வட இந்தியர்கள் கூட தமிழை கற்கிறார்களே.." மும்மொழி கொள்கை விவகாரம்.. கார்த்தி சிதம்பரம் திட்டவட்டம்
டெல்லி: புதிய கல்விக் கொள்கையை மையமாக வைத்து இப்போது மீண்டும் மும்மொழி கொள்கை விவகாரம் பெரிய பிரச்சினையாக வெடித்துள்ளது. இதற்கிடையே தமிழ்நாடு ஒருபோதும் இந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ளாது என்று தெரிவித்த காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், இரு மொழி கொள்கை மூலம் தமிழகம் நல்ல பலனைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.
இப்போது தமிழ்நாடு அரசியலில் மும்மொழி கொள்கை விவகாரம் மீண்டும் பேசுபொருள் ஆகியுள்ளது. புதிய கல்விக்கொள்கையில் மும்மொழி கொள்கையும் ஒரு அடிப்படை அம்சமாக இருக்கிறது. புதிய கல்விக் கொள்கையை அரசு ஏற்க மறுக்க இதுவே முக்கிய காரணமாக இருப்பதாக திமுகவினர் கூறுகிறார்கள்.

மும்மொழி கொள்கை
ஆனால், மும்மொழி கொள்கையை அமல்படுத்தினால் தான் நிதி தருவோம் என மத்திய அரசு சொல்வது சரியான போக்கு இல்லை என விமர்சித்து வருகிறார்கள். இது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே மோதல் போக்கே நிலவி வருகிறது. தமிழ்நாடு என்ன ஆனாலும் மும்மொழிக் கொள்கையை ஏற்கவே ஏற்காது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமியும் கூட இரு மொழிக் கொள்கையே அவர்களின் நிலைப்பாடு எனக் கூறியிருந்தார். இந்த விஷயத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களும் கூட இரு மொழி கொள்கைக்கு ஆதரவாகவே உள்ளனர்.
கார்த்தி சிதம்பரம்
இதற்கிடையே தமிழ்நாடு மும்மொழி கொள்கையை ஏற்காது எனக் கூறியுள்ள சிவகங்கை காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், எப்படி வட இந்தியர்கள் தமிழகம் வரும்போது தமிழ் கற்றுக்கொள்கிறார்களோ.. அதேபோல தமிழர்கள் வட இந்தியா செல்லும் போது இந்தி கற்றுக் கொள்வார்கள் எனக் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், "தமிழ்நாடு ஒருபோதும் இந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ளாது. தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையை நாங்கள் செயல்படுத்திச் சிறப்பான பலன்களைப் பெற்றுள்ளோம். தமிழ் நமது கலாச்சாரத்தையும் அடையாளத்தையும் பாதுகாக்கிறது. ஆங்கிலம் என்பது சர்வதேச வணிகம் மற்றும் அறிவியல் உலகத்துடன் இணைக்கிறது.
ஆங்கில வழிக் கல்வியால் சிக்கல் இல்லை
நான் படித்த பள்ளியில் ஆங்கிலம் தான் பயிற்று மொழியாக இருந்தது. அதேநேரம் எனது தாய் மொழி தமிழ். ஆனால், இது எனக்கு எந்தவிதத்திலும் நஷ்டம் இல்லை. எனது மகளும் கூட இதேபோன்ற ஒரு பள்ளியில் தான் படித்தார்.. அவருக்கும் இதனால் எந்தவொரு சிக்கலும் இல்லை.
தமிழகம் வரும் வட இந்தியர்கள்
பல ஆயிரம் தொழிலாளர்கள் வட இந்தியாவில் இருந்து வேலைக்காகத் தமிழ்நாடு வருகிறார்கள். அவர்கள் யாருக்கும் தமிழ் தெரியாது. அவர்களுக்குத் தமிழ் இலக்கணம், இலக்கியம் எதுவும் தெரியாது. அவர்களுக்குத் தமிழை எழுதவும் படிக்கவும் தெரியாது. ஆனால், அவர்களுக்கு வாழ்க்கை நடத்தத் தமிழ் தேவை என்பதால் அதை கற்றுக் கொள்கிறார்கள்.
அதேபோல தமிழகத்தைச் சேர்ந்த யாராவது ஒருவர் வட இந்தியாவுக்கு வேலைக்குச் செல்ல வேண்டி இருந்தால்.. வேலைக்காக இந்தி பேசும் மக்களுடன் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டி இருந்தால் அப்போது அவர்கள் இந்தியைக் கற்றுக்கொள்ளப் போகிறார்கள். எதையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்றே நாங்கள் சொல்கிறோம்" என்றார். வரும் நாட்களில் மும்மொழி கொள்கை குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் இன்னுமே பெரிய விஷயமாக உருவெடுக்கும் என்றே தெரிகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications