தமிழக அரசியல் கிளைமேட்.. பாஜக வளர்வது ஈசி! சொல்கிறார் சிடி.ரவி -அதிமுக பற்றி என்ன சொன்னார் தெரியுமா?
டெல்லி: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி வளர்ந்து வருவதாக அக்கட்சியின் தேசிய செயலாளர் சி.டி.ரவி தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு பாஜகவின் பொருப்பாளராக இருந்து கட்சியின் உள் விவகாரங்களின் பல்வேறு முடிவுகளை எடுத்து வரும் சி.டி.ரவி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் நிலவி வரும் அரசியல் சூழல் பாஜக வளர்வதற்கு உகந்ததாக இருக்கிறது.

நல்ல உறவை தொடர்வோம்
நாங்கள் அதிமுகவுடன் அரசியல் கூட்டணி வைத்து இருக்கிறோம். தற்போது அக்கட்சியில் நடந்து வருவது உள்கட்சி விவகாரம். ஒரு நிறுவனத்துடன் நாங்கள் உறவை வைத்து இருக்கிறோம். அதிமுகவில் யார் தலைமை தாங்கினாலும் நாங்கள் நல்ல உறவை தொடர்வோம். கடந்த 50 ஆண்டுகளாக 2 திராவிட கட்சிகள் மட்டுமே ஆட்சி செய்து வருவது மக்களுக்கு தெரியும்.

திராவிடத்தை உள்ளடக்கிய இந்துத்துவம்
ஆனால் இன்று பாஜக திராவிட கலாச்சாரம், தேசியவாதம், தமிழ் பெருமை, மக்கள் நலத்திட்டங்கள், மாநிலத்தின் அத்தியாவசிய தேவைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்துத்துவத்தை கொண்டு வருகிறது. கம்பராமாயனம், திருக்குறள், ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன், பாரதியார் ஆகியோர் இல்லாமல் திராவிடம் முழுமை பெறாது. சோழர்கள், பல்லவர்கள், பாண்டியர்கள் கட்டிய கோயில்கள் அனைத்தும் திராவிட வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் அங்கம்.

அண்ணாமலைக்கு பாராட்டு
சோழ மன்னர்கள் சனாதன தர்மத்தை காப்பாற்றுவதற்காக இந்தியா மட்டுமின்றி ஆசியாவின் பிற நாடுகளுக்கும் படையெடுத்தனர். பிறகு எப்படி திராவிடத்தை இந்துத்துவத்துக்கு எதிரானதாக காட்ட முடியும். தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலையின் பணிகள் தமிழ்நாடு முழுவதும் வளர்ந்து வருகிறது. தேர்தல்களில் நல்ல முடிவுகளை பெற, கட்சியை வலுவாக கட்டமைத்திடவும் அனைத்து பகுதிகளிலும் பூத் ஏஜெண்டுகள், கட்சித் தொண்டர்கள், தலைவர்களை செயல்படக்கூடியவர்களாக மாற்றவும் பாஜக கவனம் செலுத்தி வருகிறது.

தமிழ்நாட்டுக்கு சிறப்பு கவனம்
அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பாஜக வலுவான கட்சியாகவும் மாற்று சக்தியாகவும் உருவெடுக்கும். தமிழ்நாடு மற்றும் அதன் கலாச்சாரம் பிரதமர் நரேந்திர மோடியை வெகுவாக கவர்ந்து இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு சிறப்பு கவனம் செலுத்த பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிரான எதிர்ப்பு அலை நிலவுகிறது. இங்கு இந்துத்துவத்தை யாராலும் தடுக்க முடியாது. திமுக திராவிடத்துக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு?












Click it and Unblock the Notifications