தமிழகத்திற்கு மோடி அரசால் கிடைத்த பலன்கள் இவைதான்!
டெல்லி: மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சியில், தமிழகத்திற்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
மறுபக்கமோ, நாங்கள் தமிழகத்திற்கு மிகுந்த நன்மைகளை செய்துள்ளோம் என்று பாஜகவினர் கூறி வருகின்றனர்.
மோடி தலைமையிலான அரசு அமைந்த பிறகு தமிழகத்திற்கு என்னென்ன திட்டங்கள் கொண்டுவரப்பட்டன? எந்தெந்த மாதிரி கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன என்பது குறித்த ஒரு பார்வை இதோ:

ஜல்லிக்கட்டு
2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு உடனடியாக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.
2018 ஆம் ஆண்டு மத்திய அரசின் காப்பீடு திட்டத்தின் மூலமாக 70 ஆயிரத்துக்கும் மேலான தமிழக மக்கள் இலவசமாக உயர் சிகிச்சை பெற்றுள்ளனர். ஏழ்மைக் கோட்டுக்கு கீழேயுள்ளவர்களுக்கு காப்பீடு அட்டை வீடுகளுக்கு தபால் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

எய்ம்ஸ் மருத்துவமனை
2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், 1,264 கோடி செலவில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. 2014 முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான 4 ஆண்டுகால ஆட்சி காலத்தில் தமிழகத்தில் கிராமங்களில் 3000 கிலோ மீட்டர் வரை சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தூய்மை இந்தியா
இதே காலகட்டத்தில் தமிழகத்தில் வீடு இல்லாத 4 லட்சம் பேருக்கு மத்திய அரசு திட்டத்தின் கீழ் வீடு கட்டி தரப்பட்டுள்ளது. மேலும் சாகர்மாலா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 3 துறைமுகங்கள் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 47 லட்சம் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.

புள்ளி விவரம்
இவை மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள புள்ளி விவரங்களாகும். இவற்றின் பலன்கள் மக்களை சென்று அடைந்துவிட்டதா என்பது குறித்து, மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications