"ஏம்ப்பா அண்ணாமலையை தோற்கடிச்சவர், ஜோரா கை தட்டுங்கள்" கணபதி ராஜ்குமாருக்கு தமிழக எம்பிக்கள் ஆரவாரம்
டெல்லி: கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை தோற்கடித்ததால் அந்த தொகுதியின் லோக்சபா உறுப்பினராக புதவியேற்ற கணபதி ராஜ்குமார், தமிழக எம்பிக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
தமிழகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வென்றது. இதையடுத்து 18 ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. அப்போது இந்த கூட்டத் தொடரில் முதலில் தற்காலிக சபாநாயகராக பர்த்ருஹரி மகதாப் நியமிக்கப்பட்டார்.

அவருக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இடைக்கால சபாநாயகர் தொடர்பாக ஏற்கெனவே பாஜக, காங்கிரஸ் இடையே மோதல் இருந்து வந்தது. 8 முறை எம்பியாக இருந்த காங்கிரஸின் கே.சுரேஷை தற்காலிக சபாநாயகராக நியமிக்காமல் பாஜகவை சேர்ந்த 7 முறை எம்பியான மகதாப் நியமிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது.
மக்களவை கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எம்பி ராகுல் காந்தி, திமுக எம்பி டி.ஆர். பாலு, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் , நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்கெனவே காந்தி சிலை இருந்த இடத்தில் போராட்டம் நடத்தினர்.
சோனியா காந்தியும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார். தற்காலிக சபாநாயகர் நியமன விவகாரத்தில் பாஜக அரசியலமைப்பை மீறிவிட்டதாக குற்றம்சாட்டி அரசியலமைப்பை மீறிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
அரசியலமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தி அரசியலமைப்பைக் காப்போம், ஜனநாயகத்தை காப்போம் என அவர்கள் முழங்கினர். இதன் பிறகு அரசியலமைப்பு புத்தகத்துடனேயே உள்ளே சென்றனர். இதையடுத்து காலை 11 மணிக்கு தேசிய கீதம் இசைக்கப்பட்டு லோக்சபா தொடங்கியது.
முதலில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பிரதமர் மோடி முதலில் எம்பியாக பதவியேற்றார். அப்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த ராகுல், அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கைகளில் அரசியல் சாசன புத்தகத்தை உயர்த்தி காண்பித்தனர். இதையடுத்து சலசலப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் லோக்சபாவில் 2 ஆவது நாளாக இன்று தமிழக எம்பிக்கள் பதவியேற்றனர். தமிழகத்தில் 39 எம்பிக்களும் பதவியேற்றனர். அப்போது சசிகாந்த் செந்தில் பதவியேற்கும் போது அரசியல் சாசன புத்தகத்தை காட்டிய அவர் வாழிய வையகம்-! வாழ்க தமிழ்! தலித்- ஆதிவாசிகள்-சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை நிறுத்துக என முழக்கமிட்டார் சசிகாந்த் செந்தில்.
திமுக எம்பி கலாநிதி வீராசாமி பதவியேற்ற போது பெரியார் அண்ணா, கலைஞர் வாழ்க! திராவிடம் வாழ தளபதி வாழ்க! தமிழ் வெல்க! என முழக்கமிட்டார். அது போல் தமிழகச்சி தங்கபாண்டியன் , வளர்க முத்தமிழறிஞர் புகழ்! வாழ்க தளபதி! வாழ்க தமிழ்த் திருநாடு என முழக்கமிட்டார்.
திமுக எம்பி தயாநிதி மாறன் பதவியேற்ற போது வாழ்க தமிழ்! வாழ்க பெரியார்! வாழ்க அண்ணா! வாழ்க கலைஞர்! வாழ்க முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்! வாழ்க உதயநிதி ஸ்டாலின்~ வேண்டாம் நீட்! BAN நீட் என முழக்கமிட்டார்.
அது போல் கோவை திமுக எம்பி கணபதி ராஜ்குமாரின் பெயரை படித்ததும், தமிழக எம்பிக்கள் கைதட்டினர். அப்போது யாரோ ஒருவர், "ஏம்ப்பா அண்ணாமலையையே தோற்கடிச்சவர்பா நல்லா கைதட்டுங்கள்" என்றார். அந்த அவையில் இரு முறை அண்ணாமலையின் பெயர் உச்சரிக்கப்பட்டது. பின்னர் மேடைக்கு சென்ற கணபதி ராஜ்குமார் , தற்காலிக சபாநாயகரை பார்த்து shall i start sir? என கேட்டு தொடங்கினார்.
-
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications