அமலாக்கத்துறை கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்.. டாஸ்மாக் வழக்கில் அதிரடி உத்தரவு!
டெல்லி: டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது உச்ச நீதிமன்றம். வழக்கு விசாரணை நடைபெறுவதால் ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றிய ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்ற உத்தரவில் திருத்தம் கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
அமலாக்கத்துறை வைத்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை, ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தது.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டதுடன், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்திருந்தது.
சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்த நிலையில், ஆகாஷ் பாஸ்கரனிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு அதிகாரி நோட்டீஸ் அனுப்பியதாகக் கூறி, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக ஆகாஷ் பாஸ்கரன் சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரனுக்கு எதிராக மேல் நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம், உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
டாஸ்மாக் வழக்கில் ஆகாஷ் பாஸ்கரனிடம் கைப்பற்றிய ஆவணங்களை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவில் திருத்தம் கோரிய அமலாக்கத்துறையின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறையின் கோரிக்கையை நிராகரித்து, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி அமர்வு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
-
சும்மா வீட்ல இருக்காங்கன்னு சொல்லாதீங்க! இல்லத்தரசிகளின் உழைப்புக்கு மாதம் ரூ.30,000 மதிப்பு! சூப்பர்! -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு?












Click it and Unblock the Notifications