பெட்ரோலுக்கு நீங்க தரும் ரூ.500 யாருக்கு செல்கிறது.. அரசின் வரி எவ்வளவு? தலை சுற்ற வைக்கும் கணக்கு
சென்னை: மத்திய அரசு இன்றைய தினம் கலால் வரி குறைப்பை அறிவித்த போதிலும், சில்லறை விற்பனையில் அது எதிரொலிக்கவில்லை. இதற்கு என்ன காரணம்... நாம் ஒரு 2 லிட்டர் பெட்ரோல் போட்டால் அது முழுக்க எரிபொருளுக்கு ஆகும் செலவா.. இல்லை அதில் வரிகள் உள்ளதா.. அப்படியே வரி இருந்தால் யாருக்கு எவ்வளவு வரியை நாம் செலுத்துகிறோம் என்பதெல்லாம் குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
இந்தியாவில் பெட்ரோல் விலை மாநிலத்தைப் பொறுத்து மாறுபடும். உதாரணமாகச் சென்னையில் பெட்ரோல் ரூ. 101.06ஆக உள்ள நிலையில், பெங்களூரில் ரூ. 102.96க்கு உள்ளது. டெல்லியில் ரூ.94.77, மும்பையில் ரூ.103.54, கொல்கத்தாவில் ரூ.105.41, ஹைதராபாத்தில் ரூ.107.5 என ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விலைக்கு விற்கப்படுகிறது.

பெட்ரோல்- டீசல்
ஒரே நாட்டில் ஏன் இவ்வளவு வேறுபட்ட ரேட்டில் பெட்ரோல், டீசல் விற்கப்படுகிறது என்ற கேள்வி பலருக்கும் வரும். மேலும், நாம் செலுத்தும் பெட்ரோல் பணம் முழுமையாக அரசுக்குச் செல்கிறதா? இல்லை பெட்ரோல் நிறுவனங்களுக்குச் செல்கிறதா.. இதில் வரி எவ்வளவு எனப் பல கேள்விகள் நமக்கு எழும். இதற்கான பதிலை நாம் தெளிவாகப் பார்க்கலாம்.
நாம் வாங்கும் ஒரு லிட்டர் பெட்ரோலில் கச்சா எண்ணெய் இறக்குமதி, அதைச் சுத்திகரித்து எரிபொருள் நிலையங்களுக்குக் கொண்டு செல்லும் செலவு, மத்திய கலால் வரி, மாநில வரிகள், மற்றும் விற்பனையாளருக்குச் செலுத்தப்படும் கமிஷன் எனப் பல விஷயங்கள் இருக்கிறது. இந்தியாவில் வரிகள் கணிசமான பங்கு இருப்பதால் பெட்ரோல் விலை காட்டிலும் வரிக்காகவே நாம் கணிசமான பணத்தைச் செலுத்த வேண்டி இருக்கிறது.
மத்திய அரசு வரி
மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீது பல்வேறு வரிகளை விதிக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோலில் மத்திய அரசு விதிக்கும் மொத்த கலால் வரி ரூ. 21.90 ஆக இருந்தது. இன்று வரி குறைப்பை அறிவித்திருந்த நிலையில், அது ரூ. 11.90 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஒரு லிட்டர் டீசலுக்கான மொத்த மத்திய கலால் வரி ரூ. 17.8இல் இருந்து ரூ. 7.8ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலில் மத்திய அரசின் வரி: அடிப்படை கலால் வரி ரூ.1.4; சிறப்புக் கூடுதல் கலால் வரி ரூ.3 (முன்பு ரூ.13ஆக இருந்தது); வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் ரூ.2.5.. அத்துடன் சாலை மற்றும் உள்கட்டமைப்பு செஸ் ரூ.5 வசூலிக்கப்படுகிறது. அதேபோல டீசலை பொறுத்தவரை அடிப்படை கலால் வரி ரூ.1.8, வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் ரூ.4, சாலை மற்றும் உள்கட்டமைப்பு செஸ் ரூ.2 வசூலிக்கப்படுகிறது. டீசலில் சிறப்புக் கூடுதல் கலால் வரியாக ரூ.10 விதிக்கப்பட்டு இருந்த சூழலில், அது இப்போது முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.
குறைப்பு
மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மே 2020 முதல் தொடர்ந்து குறைத்து வருகிறது. கடந்த 2020 மே 6ம் தேதி ரூ.32.98 இருந்த கலால் வரி 2021 நவம்பர் 2ம் தேதி ரூ.27.9ஆகவும் 2025 ஏப்ரல் 8ம் தேதி ரூ.19.9ஆகவும் குறைக்கப்பட்டது. 2025 நவம்பர் 1ம் தேதி அது ரூ.21.9ஆக குறைக்கப்பட்ட சூழலில் இப்போது அது ரூ.11.9 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது..
மாநில அரசு வரி
சரி இன்னொரு கேள்வியும் வரும்.. இப்போது தான் ஜிஎஸ்டி வந்துவிட்டதே பிறகு ஏன் மாநிலத்திற்கு மாநிலம் தனி வரி என்று.. பெட்ரோல், டீசல் ஆகியவை இன்னும் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரப்படவில்லை. இதன் காரணமாகவே மத்திய அரசும் மாநில அரசுகளும் தனித்தனியாக வரிகளை விதிக்கிறது. மாநில அரசுகள் தங்களுக்குத் தேவையான வருவாயை ஈட்ட இந்த வரிகளைப் பயன்படுத்துகின்றன. தமிழக அரசு பெட்ரோல் மீது 13% மதிப்புக் கூட்டு வரி மற்றும் லிட்டருக்கு ரூ.11.52 வரி விதிக்கிறது. அதேபோல டீசலுக்கு 11% மற்றும் லிட்டருக்கு ரூ.9.62 வரியை வசூலிக்கிறது. இந்த கூடுதல் வரிகள் மாநில அரசுகளின் வரி வருவாய்க்கு முக்கியமானது!
இதர செலவுகள்
வரிகள் தான் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் கணிசமான பங்கு வகிக்கிறது. அதைத் தாண்டி கச்சா எண்ணெய் சர்வதேச சந்தையில் உயரும் போது அதுவும் ஒரு காரணமாக இருக்கிறது. இப்போது மத்திய கிழக்கு பதற்றம் காரணமாகச் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ள சூழலில், இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு அது கடும் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதை கருத்தில் கொண்டே மத்திய அரசு வரியைக் குறைத்துள்ளது.
இது தவிர டீலர்கள் கமிஷனும் தனியாக இருக்கிறது. டீலர் கமிஷன் என்பது பொதுவாக ஒரு லிட்டருக்கு ரூ. 2.5 முதல் ரூ. 4.5 வரை இருக்கும். இது டீலர்களின் லாபம், ஊழியர்களின் ஊதியம், பராமரிப்பு உள்ளிட்ட செலவுகளைச் சமாளிக்க உதவும். நீங்கள் போடும் ஒரு லிட்டர் பெட்ரோல் என்பது வெறுமன எரிபொருளுக்கு ஆன செலவு மட்டுமில்லை இத்தனை பேருக்குப் பிரிந்து செல்கிறது என்பதே உண்மையாகும்.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications