"குபேரா" ஸ்டைல் பினாமிகள்.. மத்திய அரசு எடுக்க போகும் மிக முக்கிய நடவடிக்கை! இனி தப்பே நடக்காது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா படத்தை அனைவரும் பார்த்திருப்போம். எதுவுமே தெரியாத அப்பாவி ஏழை மக்களின் பெயர்களை வைத்து கோடீஸ்வரர்கள் பினாமி ஆட்டம் ஆடுவதை அதில் காட்டியிருப்பார்கள். இதுபோல பினாமி மூலம் இயங்கும் சொத்துகளையும் பிஸ்னஸ்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முக்கியமான நடவடிக்கையை எடுக்கவுள்ளது. இதன் மூலம் பினாமி நடவடிக்கையைக் கட்டுப்படுத்த முடியும் என்கிறார்கள்.

பினாமி பரிவர்த்தனைகளைக் கட்டுப்படுத்தும் சட்டம் மேலும் கடுமையாக்கப்படவுள்ளது. இதன் மூலம் தங்கள் அடையாளங்களை மறைத்து கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களைப் பழங்குடி கிராமங்களில் உள்ள குடிசைவாசிகள் மற்றும் ஏழை தொழிலாளர்கள் பெயரில் வைத்திருக்கும் தொழிலதிபர்களை அடையாளம் காண முடியும்.

Tax Sleuths to Gain Aadhaar Property Registry Access to Unmask Benami Owners and Curb Illegal Deals

பினாமி சொத்து

பினாமி சொத்து ஒப்பந்தங்கள் மீதான அரசின் நடவடிக்கை இன்னும் தீவிரமடையக்கூடும் எனச் சொல்லப்படுகிறது. இதற்காக அதிகாரிகளுக்கு அதிக அதிகாரங்களை வழங்குவது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருகிறதாம். ஆதார், மாநில சொத்து பதிவுகள் மற்றும் வாகனத் தரவுத்தளங்களை அணுகுவது உள்ளிட்ட விரிவான மாற்றங்களைச் செய்ய CBDT எனப்படும் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் குழு பரிந்துரைத்துள்ளது. இதன் மூலம் உண்மையான உரிமையாளர்களைக் கண்டறிய முடியும்.

10 நாட்களுக்கு முன்பு மத்திய நேரடி வரிகள் வாரியம் இந்தப் பரிந்துரைகளை அளித்திருந்தது. அதில் பினாமி சொத்து பரிவர்த்தனை தடைச் சட்டம், 1988ல் திருத்தங்கள் செய்யக் கோரியுள்ளது. ஒரு பினாமி சொத்து கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருந்தால், அந்த நபரின் மற்ற சொத்துக்களைப் பறிமுதல் செய்ய இந்தத் திருத்தங்கள் வழிவகுக்கும்.

குபேரா

பொதுவாக ஒரு பினாமி ஒப்பந்தத்தில், சொத்து வேறு ஒருவரின் பெயரில் வாங்கப்படுகிறது. குபேரா படத்தில் வருவது போலப் பெரும்பாலும் ஒரு விவசாயி, குடிசைவாசி அல்லது தொழிலாளி பெயரிலேயே வாங்கப்படுகிறது. ஆனால், அவருக்கு அவ்வளவு பெரிய நிலம் அல்லது பிஸ்னஸை வாங்கப் பணம் இருக்காது. அதாவது போலியாக இதுபோன்ற ஏழைகளின் ஆவணங்களைப் பயன்படுத்திவிட்டு, வேறு ஒருவர் பிஸ்னஸ் பார்த்துக் கொள்வார். இத்தகைய பினாமிகளுக்கு பெரும்பாலும் பான் எண், வங்கிக் கணக்குகள் அல்லது வரிக் கணக்குகள் இருக்காது. இதனால் அவர்களைக் கண்டறிவது கடினம்.

ஆதார் மூலம் வருமான வரித் துறையின் இன்சைட் போர்ட்டலை இணைப்பதால் அது பினாமி சொத்துகளைக் கண்டறிய அதிகாரிகளுக்குப் பெரியளவில் உதவும் என்று அந்த ரிப்போர்ட் கூறுகிறது.. ரூ.30 லட்சத்திற்கு மேலான சொத்து ஒப்பந்தங்களுக்கு மட்டுமே பான் கட்டாயமாக இருந்தாலும், ஆதார் பதிவுகள், KYC ஆவணங்கள் மற்றும் வங்கிக் கணக்குகளில் பான் பரவலாகப் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.. இதனால் தகவல்களை அதிகாரிகளால் அணுக முடிந்தால் எளிதாக பினாமிக்களை கண்டுபிடிக்கலாம்.

அதிகாரிகள் சொல்வது என்ன

இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், "பினாமிக்களை கண்டறிய இதுபோன்ற நடவடிக்கைகள் காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டன.. பிரைவசி பறிபோகிறது எனச் சிலர் சொல்லலாம்.. ஆதார் இணைக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகளின் விவரங்களை 'view-only' முறையிலாவது நாங்கள் அணுகக்கூடிய வகையில் மாற்ற வண்டும். அப்போது தான் பினாமிக்களை கண்டறிய முடியும்" என்றார்.

நடவடிக்கை தேவை

பினாமி சொத்துக்களை வைத்திருக்கும் ஷெல் நிறுவனங்கள் மீதான சோதனையைத் தீவிரப்படுத்துமாறும் இந்தக் குழு மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. இயக்குநர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு வருமானம் இல்லாமல் இருப்பது, பெரும்பாலான ஷேர் ஹோல்டர்கள் வரிக் கணக்குத் தாக்கல் செய்யாதது, மற்றும் பாதுகாப்பற்ற கடன்கள் ஆகியவை இருந்தால் அந்த நிறுவனங்களை ஆய்வு செய்ய வேண்டும் என இந்தக் குழு வலியுறுத்தியுள்ளது.

மேலும், சொத்து ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்ய மாநிலங்களுக்கு உரிமை, சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளைக் கண்காணிப்பது, பினாமியாக செயல்படக்கூடியோரின் கணக்குகளைக் கண்டறிவது, கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களைக் கண்காணித்தல் போன்ற சில பரிந்துரைகளையும் அக்குழு முன்வைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+