Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

47 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது - காணொளிக்காட்சி மூலம் ஜனாதிபதி வழங்கினார்

தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 2 ஆசிரியர்கள் உள்பட இந்தியா முழுவதும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 47 ஆசிரியர்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தேசிய நல்லாசிரியர் விருதுகளை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆசிரியர் தினமான இன்று நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு குடியரசுத்தலைவர் இன்று விருதுகளை வழங்கி கவுரவித்தார். டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் காணொளி வாயிலாக விருதுகளை வழங்கினார். விருது பெற்ற 47 ஆசிரியர்களில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நாட்டில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு இந்த நாளில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

Teachers Day 2020: President Ram Nath Kovind confers winners of National Teachers Awards

இந்தஆண்டு இந்தியா முழுவதிலும் 47 ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு அவர்களின் பெயர்கள் கடந்த மாதம் மத்திய கல்வி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டன. விருதுக்காக தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் டெல்லி விக்யான் பவனில் செப்டம்பர் 5ஆம் தேதியன்று குடியரசுத் தலைவர் கைகளால் விருது அளிக்கப்படும்.

இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக காணொளி காட்சி மூலம் விருது வழங்கும் விழா நடைபெற்றது. குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் 47 ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

தமிழகத்திலிருந்து சென்னை அசோக்நகர் மகளிர் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.சி.சரஸ்வதி, விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் எஸ்.திலீப் ஆகியோர் இன்று தேசிய நல்லாசிரியர் விருதுகளை குடியரசுத்தலைவரிடம் இருந்து பெற்றுக்கொண்டனர்.

Recommended Video

    தந்தை இறந்த சோகத்தில் கூட கடமை தவறாமல் செய்த Woman Inspector | Oneindia Tamil

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+