நாட்டின் சிறந்த முதல்வர் யார்? கொஞ்சமும் யோசிக்காமல்.. ஸ்டாலின் பெயரை சொன்ன தேஜஸ்வி! காரணம் இதுதான்
டெல்லி: நாட்டின் சிறந்த முதலமைச்சர் யார் என்கிற கேள்விக்கு கொஞ்சமும் யோசிக்காமல், மு.க.ஸ்டாலின் என பீகார் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் கூறியிருப்பது தேசிய அரசியலில் கவனம் பெற்றிருக்கிறது.
NEWS 24 செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த தேஜஸ்வி இவ்வாறு கூறியிருக்கிறார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த பல நலத்திட்டங்கள் பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில் சிறந்த முதலமைச்சர் என்று ஸ்டாலின் பெயரை தேஜஸ்வி கூறியிருப்பது தேசிய தலைவராக ஸ்டாலின் உயர்ந்திருக்கிறார் என்பதை காட்டுகிறது என்று திமுகவினர் கூறுகின்றனர்.

பேட்டியின் போது நிருபர் கேள்வி எழுப்பியதாவது, "நாட்டின் சிறந்த முதலமைச்சராக நீங்கள் யாரைக் கருதுகிறீர்கள்? பீகாருக்கு வெளியே பார்த்தாலும் நிறைய பேர் இருக்கிறார்கள், அவர்களைப் பற்றி நிறைய விவாதிக்கப்படுகிறது.
இப்போதுள்ள சூழ்நிலையில் இருப்பவர்களைப் பற்றியோ அல்லது இதற்கு முன் இருந்தவர்களைப் பற்றியோ... உங்களுக்கு யாருடைய பெயரை வேண்டுமானாலும் சொல்லலாம். ஏனென்றால், பழையவர்களில், சிலர் மோடிஜியின் பெயரையும் சொல்கிறார்கள். சிலர் முலாயம் சிங்கின் பெயரைச் சொல்கிறார்கள். சிலர் அகிலேஷ் யாதவின் பெயரையும் சொல்கிறார்கள். சிலர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பெயரையும் சொல்கிறார்கள். இப்போதையவர்களைப் பற்றிப் பேசலாம். இப்போதையவர்களில் சொல்லுங்கள்."
தேஜஸ்வி யாதவ்: "இப்போதையவர்களில், எனக்குத் தோன்றுகிறது, ஸ்டாலின். சரி, ஏன் என்றும் கேளுங்கள்."
நிருபர்: "ஆமாம், சொல்லுங்கள்."
தேஜஸ்வி யாதவ்: "நம்முடைய முதலமைச்சர் (பீகார் முதலமைச்சர்) வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடுகளைக் கொண்டு வருவதை நான் பார்க்கவில்லை. முதலீட்டைக் கொண்டுவருவதற்காக அவர் எதுவும் செய்வதில்லை. ஆனால், ஸ்டாலின் அவர்கள் முயற்சி செய்கிறார். அவர் முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்துகிறார், முதலீடுகளைக் கொண்டு வருகிறார்." என்று கூறியுள்ளார்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications