டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விமான கதவை திறந்த விவகாரம்.. "மன்னிப்பு கேட்டார் தேஜஸ்வி சூர்யா" ஜோதிராதித்திய சிந்தியா விளக்கம்!

Google Oneindia Tamil News

டெல்லி: இண்டிகோ விமானத்தின் அவசர வழிக் கதவை திறந்த விவகாரம் குறித்து மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்திய சிந்தியா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், விமானத்தின் அவசர வழிக் கதவை தவறுவதாக பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா திறந்துவிட்டதாகவும், இதற்காகா அவர் மன்னிப்பு கேட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 10ம் தேதி சென்னையிலிருந்து இண்டிகோ 6E-7339 விமானம் புறப்படத் தயாராக இருந்தபோது, அந்த விமானத்தின் அவசரவழிக் கதவை பயணி ஒருவர் திறந்ததாகச் செய்திகள் வெளியாயின.

அவசரகால கதவு திறக்கப்பட்டதால் விமானம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, அவசரகால கதவு மற்றும் விமானத்தின் காற்றழுத்தம் சரிபார்க்கப்பட்டு 2 மணிநேரம் தாமதமாக விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்த செயலில் ஈடுபட்டவர் கர்நாடக பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா என்றும், அவருடன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இருந்ததாகவும் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் தெரிவித்ததாகச் சில தகவல்கள் வெளியாயின.

பணப் பையோடு வெளியே வந்த கதிரவன் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்பு.. இதுதான் காரணமாம்! இப்படி சொல்லிட்டாரே பணப் பையோடு வெளியே வந்த கதிரவன் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்பு.. இதுதான் காரணமாம்! இப்படி சொல்லிட்டாரே

பயணிகள் சொன்ன தகவல்

பயணிகள் சொன்ன தகவல்

இதனிடையே அந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், விமானம் கிளம்பி ஓடுதளத்தில் சென்று கொண்டிருந்தபோது விமான பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து விமானக் குழுவினர் தெரிவித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவசரகால கதவை தேஜஸ்வி சூர்யா திறந்தார்.

செந்தில் பாலாஜி விமர்சனம்

செந்தில் பாலாஜி விமர்சனம்

இதன்விளைவாக அனைவரும் கீழே இறக்கிவிடப்பட்டோம். இதுதொடர்பாக தேஜஸ்வி மன்னிப்பு கேட்ட பிறகே அவரை பயணம் செய்ய விமான நிர்வாகம் அனுமதித்தது. எனினும், அவசரகால கதவின் அருகிலிருந்த அவரது இருக்கை மாற்றப்பட்டது என்று தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி, கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் விமான அவசரகால கதவு திறந்த விவகாரத்தை ட்விட்டரில் பதிவிட்டு விமர்சித்தனர்.

விசாரணை

விசாரணை

இருப்பினும், அவசரகால கதவு திறக்கப்பட்டது உண்மைதான் என உறுதிபடுத்திய இண்டிகோ விமான நிறுவனம் திறந்தவரின் பெயரை கூறவில்லை. இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தொடர்ந்து விமர்சிக்க தொடங்கிய நிலையில், மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஒரு மாதத்திற்கு பின்னர் விசாரணைக்கு உத்தரவிட்டது.

ஜோதிராதித்திய சிந்தியா விளக்கம்

ஜோதிராதித்திய சிந்தியா விளக்கம்

இந்த விவகாரம் குறித்து விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்திய சிந்தியா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து ஜோதிராதித்திய சிந்தியா கூறுகையில், விமானத்தில் அவசர வழி கதவு திறக்கப்பட்ட விவாகரத்தில் தவறுதலாக கதவு திறக்கப்பட்டதாக பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்டு விட்டார் என்று தெரிவித்தார்.

English summary
Union Aviation Minister Jyotiraditya Scindia has explained about the opening of the emergency door of the IndiGo flight. He said that BJP MP Tejashwi Surya had opened the emergency door of the plane and he apologized for it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X