Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

11 எம்எல்ஏ-க்களை தகுதி நீக்க செய்ய கோரும் வழக்கு.. தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 11 எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய கோரும் வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து 3 எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கையும் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்ததுள்ளது.

மேற்கண்ட இருவழக்குகளையும் விரைந்து விசாரிக்குமாறு திமுக மற்றும் அமமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இவ்வழக்குகள் நீதிபதி ஏ.எஸ்.பாப்டே தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

Tension in TN politics.. 11 MLAs to be disqualified case.. Hearing today in supreme court

இந்நிலையில் 11 எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கானது எப்போது விசாரிக்கப்படும் என, பின்னர் அறிவிப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் இரண்டு வழக்குகளும் ஒரே நாளில் தனித்தனியாக விசாரிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய கோரும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. திமுகவின் தங்கதமிழ்செல்வனின் கோரிக்கை மனுவை ஏற்ற உச்சநீதிமன்றம் இன்று இவ்வழக்கை விசாரிக்க முடிவு செய்தது. இத்தடன் சேர்த்து 3 எம்எல்ஏ-க்களுக்கு எதிராக சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸிற்கு எதிரான வழக்கையும் உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கும் என கூறப்பட்டது.

முன்னதாக கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தவுடன், அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியும், ஓ பன்னீர் செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் உருவானது, தற்போதைய துணை முதல்வர் ஓ .பன்னீர்செல்வத்தை ஆதரித்து, எம்எல்ஏ-க்கள் மாஃபா பாண்டியராஜன், சண்முகநாதன், சின்னராஜ், மாணிக்கம், மனோரஞ்சிதம், ஆறுக்குட்டி, செம்மலை, மனோகரன், சரவணன், நட்ராஜ் ஆகியோர் இருந்தனர். இதனால் எடப்பாடி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக திமுக குற்றம்சாட்டியது.

இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டார். அப்போது ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்களும் எடப்பாடிக்கு எதிராகவே வாக்களித்தனர். எனினும் அந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியே வெற்றி பெற்றார்.

இதையடுத்து நிகழ்ந்த பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு பிறகு ஒருவழியாக எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் அணிகள் ஒன்றாக இணைந்தன. ஒப்பந்தப்படி தற்போது தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமியும், மாநில துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வமும் இருந்து வருகின்றனர்.

இதனிடையே ஒரே கட்சியில் இருந்து கொண்டு அந்த கட்சிக்கு எதிராக சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லாத தீர்மானத்தின் போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 11 எம்எல்ஏக்களை மீது தகுதி நீக்கம் செய்து உத்தரவிட கோரி டிடிவி தினகரனின் அமமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு வெற்றிவேல், தங்கதமிழ் செல்வன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

இது தொடர்பாக திமுக சார்பில் அக்கட்சியின் கொறடா சக்கரபாணியும் வழக்கு தொடர்ந்திருந்தார் இந்த வழக்குகளை விசாரித்த அப்போதைய சென்னை ஐகார்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி 11 எம்.எல்.ஏ.க்கள் எதிர்த்து வாக்களித்தது தொடர்பான விவகாரத்தில் கோர்ட்டு தலையிட முடியாது, சபாநாயகர் முடிவே இறுதியானது என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும் 11 பேர் தகுதி நீக்க வழக்கை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார். இதை எதிர்த்து திமுக கொறடா சக்கரபாணி, டிடிவி தினகரன் அணி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூ‌ஷன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி ஏ.கே.சிக்ரி சமீபத்தில் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதனால் 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணை நடைபெறாமல் நிலுவையில் இருந்தது.

இந்த நிலையில் அண்மையில் திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன் உச்சநீதிமன்றத்தில் இன்று இது தொடர்பாக ஒரு மனுதாக்கல் செய்தார். அதில், 11 எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்க வழக்கு விசாரணை நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது. அதை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.

திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் சில வாதங்களை முன்வைத்தார் தமிழக பேரவையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர தீர்மானிக்கப்பட்டது. தற்போது அது வலியுறுத்தப்படவில்லை. மேலும், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இவ்வழக்கு விரைந்து விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதே கோரிக்கையை டிடிவி தினகரன் தரப்பும் முன்வைத்தது

இருதரப்பு வாதத்தையும் ஏற்ற உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்றும் இதற்காக புதிய அமர்வு விரைவில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்

இந்நிலையில் திமுக தொடர்ந்த 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என உச்சநீதின்றம் நேற்று அறிவித்தது. இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, பி,ஆர்.கவாய் அமர்வு விசாரணைக்கு வரும் என கூறப்பட்டிருந்தது.

இதனால் எடப்பாடிக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு சிக்கல் ஏற்படும் என கருதப்பட்டது. இந்நிலையில் மேற்கண்ட இரு வழக்குகளையும் விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ள உச்சநீதிமன்றம் விசாரணை தேதியை பின்னர் அறிவிப்பதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+