Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே ஒரு போஸ்டர்.. அடுத்து திருப்பூரில் சிக்கிய தீவிரவாதிகள்.. தமிழக நெட்வொர்க் சிக்கியது எப்படி?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் செயல்பட்டு வந்த தீவிரவாத நெட்வொர்க்கை டெல்லி போலீசார் அதிரடியாக முறியடித்தனர். இந்தத் தீவிரவாத நெட்வொர்க் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி.. இவர்களை டெல்லி போலீசார் கண்டுபிடித்தது எப்படி என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!

இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல்களை முறியடிக்கப் பல்வேறு விசாரணை முகமைகள் தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அப்படித் தான் அதிரடி ஆபரேஷனில் இறங்கிய டெல்லி போலீசார், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ மற்றும் வங்கதேசத் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய ஒரு பெரிய பயங்கரவாத வொர்க்கை அதிரடியாக முறியடித்துள்ளது.

Terrorists arrest in Tamil nadu How a single Kashmir poster lead to the arrest of Huge Terror Plot

8 பேர் கைது

இந்த விரிவான ஆபரேஷன் நடவடிக்கையில், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த எட்டுச் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். வெளிநாட்டுக் கும்பலால் வழிகாட்டுதலின் கீழ் இந்தியாவில் ஒரு பெரிய பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தக் குழு திட்டமிட்டதாகக் காவல்துறை சந்தேகிக்கிறது. கைது செய்யப்பட்ட ஆறு பேர் - மிஷானூர் ரஹ்மான், முகமது ஷாபத், உமர், முகமது லிட்டன், முகமது ஷாஹித் மற்றும் முகமது உஜ்ஜல் ஆகியோர் தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.. இவர்கள் அங்கு ஆடை உற்பத்தி நிறுவனங்களில் வேலை செய்து வந்தனர்.

மேலும், இரண்டு பேர் மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டதாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இவர்களில் சிலர் வங்கதேச நாட்டவர்கள் என்பதும் தெரிய வந்தது. இவர்கள் தங்கள் அடையாளத்தை மறைக்கப் போலி ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தியதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்தது.

எச்சரிக்கை

டெல்லியில் மக்கள் அதிகம் கூடும் மத மற்றும் பாரம்பரியத் தளங்களைக் குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என அண்டையில் தான் எச்சரிக்கை வந்திருந்தது. பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர்-இ-தைபா (LeT) அமைப்பு இந்த இடங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தலாம் என்று ஹை அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. சாந்தினி சௌக் கோயில், செங்கோட்டை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் IED தாக்குதலுக்குப் பயங்கரவாதிகள் திட்டமிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

எப்படி?

அந்தப் பரபரப்பு வந்து ஒரு நாள் கூட ஆகாத நிலையில், இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை ஆதரிக்கும் ஆன்லைன் பதிவுகள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் இது தெரிய வந்துள்ளது. இதையடுத்து உள்ளூர் திருப்பூர் போலீசார் உதவியுடன் டெல்லி போலீஸ் களமிறங்கியது. திருப்பூரில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் ஆறு பேர் வேலை செய்து வருவதையும், போலி ஆதார் அட்டைகளை வைத்திருந்ததையும் சிறப்புப் பிரிவு குழு கண்டறிந்தது.

இந்த அதிரடி சோதனையின் போது, எட்டு மொபைல் போன்கள் மற்றும் 16 சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டன. அதில் உள்ள டிஜிட்டல் ஆதாரங்கள் குறித்து போலீசார் இப்போது ஆய்வு செய்து வருகிறார்கள். அண்மையில் டெல்லி மெட்ரோ நெட்வொர்க் உட்பட டெல்லியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் "காஷ்மீரை விடுவி" என்ற கோஷங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தது. அதைத் தொடர்ந்தே டெல்லி போலீஸ் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தது.

போஸ்டரால் சிக்கிய கும்பல்

இந்த போஸ்டர் குறித்துச் சிறப்புப் பிரிவு நடத்திய தீவிர விசாரணையில் தான், தமிழ்நாட்டிலிருந்து செயல்படும் இந்த தீவிரவாத நெட்வொர்க் கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து நடந்த விசாரணைகளே கைதுகளுக்கு வழி வகுத்தது. இப்படி தான் சில மாதங்களுக்கு முன்பு காஷ்மீரில் ஒட்டப்பட்ட சில சுவரொட்டிகள் ஃபரிதாபாத்தின் மருத்துவர்கள் கைதுக்கு வழிவகுத்த நிலையில், இப்போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இதன் மூலம் மிகப் பெரிய ஒரு தீவிரவாதத் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் வேறு நபர்களுக்குத் தொடர்பு உள்ளதா.. அவர்களின் நிதி ஆதாரங்கள் மற்றும் எல்லை தாண்டிய தொடர்புகளை அடையாளம் காண மேலும் விசாரணை நடந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+