தற்கொலை செய்து கொண்ட தஞ்சை பள்ளி மாணவியின் தந்தை சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு
டெல்லி: தற்கொலை செய்துகொண்ட தஞ்சை பள்ளி மாணவியின் தந்தை உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்ட நிலையில், மாணவி தற்கொலை விவகாரத்தில் தனது தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என மனு அளித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்தார்.
கடந்த மாதம் 9ஆம் தேதி அந்த மாணவி பூச்சி மருந்தைக் குடித்த நிலையில், 19ஆம் தேதி உயிரிழந்தார். விடுதியில் வார்டன் தன்னை வேலைகள் கொடுத்து டார்ச்சர் செய்வதாகவும், வீட்டுக்கு அனுப்பாமல் கொடுமைப் படுத்துவதாக பூச்சி மருந்தை குடித்துள்ளார்.

சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மாணவி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
தன்னை மதமாற்றம் செய்ய பள்ளி நிர்வாகம் வற்புறுத்தியதாகவும் இதன் காரணமாகவே தான் தற்கொலைக்கு முயன்றதாகவும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியான நிலையில், அந்த வீடியோவை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்ட பக்கத்தில் வெளியிட்டார் இது பெரும் சர்ச்சையானது.
பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டதாக எந்த ஆதாரமும் இல்லை எனவும், மாதிஸ்திரேட்டிடம் அளித்த வாக்குமூலத்திலும் மாணவி எந்த இடத்திலும் மதமாற்றம் என்ற வார்த்தையை கூறவில்லை எனவும், மாணவி குறித்த அடையாளங்களை வெளியிடுவது குற்றம் எனவும், கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சை மாவட்ட காவல்கண்காணிப்பாளரான ரவளிபிரியா ஐபிஎஸ்.
மாணவியின் மரணம் தொடர்பாக 62 வயதான விடுதி கண்காணிப்பாளரான சகாய மேரி கடந்த ஜனவைரி 21ஆம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். மாணவி மரணத்திற்குப் பிறகு பள்ளியில் விசாரணை நடத்தப்பட்டு மாணவி தற்கொலையில் மதமாற்றம் இல்லை என விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மறு உடல் கூராய்வு நடத்தத் தேவையில்லை என்று மதுரை உயர் நீதிமன்றம் கூறியதையடுத்து, இதனை ஏற்றுக் கொண்டு மாணவியின் பெற்றோர் அவரது உடலைப்பெற்று தகனம் செய்தனர்.
தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவியின் தந்தை முருகானந்தம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார். அதில் தனது மகளை கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்படி பள்ளி நிர்வாகத்தினர் கொடுத்த நிர்பந்தத்தால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார். எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்ற வேண்டும் என கோரியிருந்தார்.
தஞ்சாவூர் பள்ளியில் மதமாற்றம் நடக்கவில்லை எனவும், மாணவி தற்கொலை சம்பவத்தை வைத்து தமிழகத்தில் பிரச்சனையை உருவாக்க முயற்சிப்பதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அரியலூர் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக தேசிய குழந்தைகள் நல ஆணையம் விசாரணையை தொடங்கியது.
பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கடந்த ஜனவரி 31ஆம் தேதி உத்தரவிட்டார். இந்த நிலையில் தற்கொலை செய்துகொண்ட தஞ்சை பள்ளி மாணவியின் தந்தை உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். மாணவி தற்கொலை விவகாரத்தில் தனது தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என மனு அளித்துள்ளார்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications