டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் கொரோனா பாதிப்பில்லாத முதல் யூனியன் பிரதேசம்... சாதனை படைத்தது அந்தமான்!

Google Oneindia Tamil News

டெல்லி : இந்தியாவில் கொரோனா இல்லாத முதல் யூனியன் பிரதேசம் என்ற பெருமையை அந்தமான் பெற்றுள்ளது.

Recommended Video

    கொரோனா இல்லா அந்தமான்... மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    கடந்த 6 நாட்களாக யாருக்கும் புதிதாக தொற்று ஏற்படவில்லை. கடைசியாக தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த 4 பேர் குணமடைந்தனர்.

    The Andaman and Nicobar Islands are proud to be the first Union Territory without corona in India

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளது. ஆனாலும் கேரளா, மகாராஷ்டிராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது. மற்ற மாநிலங்களில் பாதிப்பு ஓரளவு உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா இல்லாத முதல் யூனியன் பிரதேசம் என்ற பெருமையை அந்தமான் பெற்றுள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவு பகுதியில் தற்போது கொரோனா தொற்றுடன் யாருமே இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 நாட்களாக யாருக்கும் புதிதாக தொற்று ஏற்படவில்லை.

    கடைசியாக தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நான்கு பேரும் பூரண குணமடைந்ததாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்தமானில் மொத்தமாக 4994 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 4932 பேர் குணம் அடைந்துள்ளனர். 62 பேர் உயிரிழந்துள்ளனர்.

    உள்ளூர் நிர்வாகம் கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றியதால் அந்தமானில் கொரோனா முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அந்தமானில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 2,844 சுகாதாரப் பணியாளர்கள் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The Andaman and Nicobar Islands are proud to be the first Union Territory without corona in India
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X