'கலாச்சாரம் என்ன ஆகுறது?' தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணம் குறித்து பதறிய பார் கவுன்சில்!
டெல்லி: தன்பாலின் ஈர்பாலர்களின் திருமணங்கள் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் இந்த சட்டப்பூர்வ அங்கீகாரத்திற்கு 'இந்திய பார் கவுன்சில்' கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அனைவரும் சமம் என்று குறிப்பிட்டுள்ள நிலையில் தன்பாலின ஈர்ப்பாளர்களாகிய நாங்கள் திருமணம் செய்துக்கொள்ளும் போது அந்த திருமணம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாமல் இருக்கிறது. இதன் மூலம் அனைவரும் சமம் என்கிற அரசியமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமை மறுக்கப்படுகிறது. எனவே எங்கள் திருமனத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று பல்வேறு மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களில் தன்பாலின ஈர்ப்பாளர்கள், இடதுசாரிகள், முற்போது இயக்கங்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அனைத்து மனுக்களும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. தற்போது இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் நிலைபாடு குறித்து உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பியது. இதற்கு பதிலளித்த மத்திய அரசு, "தன்பாலின் ஈர்ப்பாளர்களின் திருமணம் என்பது நகர்ப்புற மேல்தட்டு வர்க்கத்தினரின் பார்வை. இதை அனைவரும் விரும்பவில்லை. இந்தியா என்பது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நாடு. இந்த நாட்டில் ஆணும் பெண்ணும், குழந்தைகளும்தான் குடும்பமாக அங்கீகரிக்கப்படுகிறது.
மட்டுமல்லாது தன்பாலின ஈர்பாபளர்களின் திருமணங்கள் கலாச்சாரத்திற்கு புறம்பானதாக இருக்கிறது. எனவே இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்திடம் விட்டுவிட வேண்டும். சிறிய நகரங்களில் வாழும் மக்களின் கருத்துக்கள், மதப் பிரிவுகள், தனிப்பட்ட சட்டங்கள், பழக்கவழக்கங்கள், மற்ற திருமண முறைகள் மீது தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணம் ஏற்படுத்தும் விளைவுகள் என விரிந்த பார்வையில் இதனை பார்க்க வேண்டும். இந்தியாவில் திருமணம் என்பது புனிதமான ஒன்றாக இருக்கிறது.
இந்நிலையில் தன்பாலின ஈர்பாளர்களின் திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டால் அது ஒவ்வொரு குடிமகனின் நலனையும் பாதிக்கும். பாலியல் தேர்வு மற்றும் பிறரின் தலையீடு இல்லாமல் இருப்பதற்கான உரிமை போன்ற அடிப்படை உரிமைகள் ஏற்கெனவே திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் 2019ன்படி பாதுகாக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில் தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்தை அங்கீகரிக்க வேண்டியதற்கான அவசியம் என்ன வந்ததது?" என்று கூறி மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நீதிமன்றம், "இத்தனை ஆண்டுகளாக இது குறித்து மத்திய அரசு எந்த முடிவும் எடுக்காததால்தான் நாங்கள் இதனை கையில் எடுத்திருக்கிறோம். இந்த திருமணம் நகர்ப்புற மேல்தட்டு பார்வை என்பதற்கான எந்த டேட்டாவும் அரசிடம் இல்லை" என்று நீதிபதிகள் கூறியிருந்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்க கோரி அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
இப்படி இருக்கையில் இந்திய பார்கவுன்சில் தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானத்தை இயற்றியுள்ளது. அதாவது, "தன்பாலின ஈர்பபாளர்களின் திருமணங்களுக்க சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படுவதால் கலாசாரம் மற்றும் சமூக கட்டமைப்பு சிதையும். எனவே உச்சநீதிமன்றம் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். இந்த விவகாரத்தை நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தின் வசம் விட்டுவிட வேண்டும்" என்று இந்திய பார் கவுன்சில் தலைவர் மணன் குமா மிஸ்ரா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications