Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்திய துணைத் தூதரகம் செய்த தவறு: சவூதியில் முஸ்லீம் என நினைத்து இந்து தொழிலாளியின் உடல் புதைப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சவுதி அரேபியாவில் இறந்த இந்தியாவை சேர்ந்த இந்து மதத்தை சேர்ந்தவர் ஒருவரின் உடலை முஸ்லீம் என நினைத்து அங்கேயே புதைத்து விட்டனர்.

இந்தியத் துணைத் தூதரகத்தின் மொழி பெயர்ப்பாளர் செய்த தவறால் இந்தியரின் உடல் சவுதி அரேபியாவில் புதைக்கப்பட்டது.

கணவரின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வரக்கோரி அவரது மனைவி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க இந்திய துணை தூதரக அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

சவுதி அரேபியாவில் இந்தியர் மரணம்

சவுதி அரேபியாவில் இந்தியர் மரணம்

அரபு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் இந்தியாவை சேர்ந்த சஞ்சீவ் குமார் என்பவர் ஜனவரி 24 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டார். இதனை தொடர்ந்து அவரது மனைவி கணவரின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்படி இந்திய தூதரக அதிகாரிகளை அணுகினார்.

 இந்தியத் துணைத் தூதரகம் செய்த தவறால் உடல் புதைப்பு

இந்தியத் துணைத் தூதரகம் செய்த தவறால் உடல் புதைப்பு

அப்போது சவுதியில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பாளர் ஜெட்டா, சஞ்சீவ் குமாரின் இறப்புச் சான்றிதழில் அவரது மதத்தை 'முஸ்லீம்' என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து சஞ்சீவ் குமாரின் உடல் இசுலாமிய சடங்குகளின்படி அங்கேயே புதைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி கேட்டபோது, இந்தியத் துணைத் தூதரகம் செய்த தவறை ஒப்புக் கொண்டது.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இந்த நிலையில் கணவரின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர உத்தரவிடக் கோரி சஞ்சீவ் குமார் மனைவி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் இந்தியத் துணைத் தூதரகம் செய்த தவறை சுட்டிக்காட்டி இருந்தார். நீதிபதி பிரதிபா எம் சிங் இந்த மனுவை விசாரித்தார்.

இந்திய தூதரக அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவு

இந்திய தூதரக அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவு

அப்போது அவர், சஞ்சீவ் குமார் மரணம் அடைந்ததில் இருந்து அவரது மனைவி இந்திய துணை தூதரக அதிகாரிகளை அணுகி வருகிறார். எனவே இறுதி சடங்குகளை நடத்துவதற்காக இறந்தவரின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு போதுமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று இந்திய துணை தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+