லோக்சபா தேர்தல்.. தீவிரமடையும் எதிர்பார்ப்புகள்! ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது பட்ஜெட் கூட்டத்தொடர்
டெல்லி: நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதனை தொடர்ந்து நாளை மத்திய நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் இரண்டாவது 5 ஆண்டு காலத்தின் கடைசி நாடாளுமன்ற கூட்டத்தொடர் இதுதான். இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி மாதம் 9ம் தேதி வரை நடைபெறுகிறது. மரபுப்படி இன்று நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உறையாற்றியுள்ளார்.

ஏற்கெனவே கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரில், ஏராளமான எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். குளிர்கால கூட்டத் தொடரின்போது இளைஞர்கள் சிலர் நாடாளுமன்றத்தில் புகை குப்பிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலையின்மைக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இது நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடாக பார்க்கப்பட்டது. எனவே எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்தன.
இந்தியா கூட்டணியை சேர்ந்த எம்பிக்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். ஆனால் பதாகைகளை ஏந்த அனுமதி இல்லை என்று கூறி அந்த எம்பிக்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்தார். இப்படியாக மக்களவையில் 100 எம்பிக்களையும், மாநிலங்களவையில் 46 எம்பிக்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதற்கு முன்னர் இந்த அளவுக்கு எம்பிக்கள் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டது கிடையாது.
இதை கண்டித்து எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தியது. மறுபுறம் மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் இந்தியா கூட்டணி தலைவர்களை குறிவைப்பதாகவும், எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பீகார் முன்னாள் முதல்வர் நிதிஷ்குமார் போன்றவர்கள் அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட விசாரணைகளை எதிர்கொண்டிருக்கின்றனர்.
அதேபோல அசாமில் ராகுல் காந்தியின் பாரத் ஜடோ நியாய யாத்திரைக்கு அம்மாநில அரசே இடையூறு ஏற்படுத்துவதாகவும் விமர்சனங்கள் கிளம்பியிருக்கிறது. இந்த நிலையில்தான் பட்ஜெட் கூட்டத்தொடர் கூடுகிறது. முன்னதாக இந்த கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, நேற்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியிருந்தார். இதில் காங்கிரஸ், ராகுல் காந்தியின் யாத்திரைக்கு அசாம் அரசு இடையூறு ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டை எழுப்பியிருந்தது.
இருப்பினும் அனைத்துக்கட்சி கூட்டம் சுமூகமாக முடிந்ததாக ஜோஷி அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. இதில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றி தொடரை தொடங்கி வைத்தார். இதனையடுத்து நாளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். லோக்சபா தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
வேலைவாய்ப்பு, பெண்கள், வேளாண், எரிபொருள் விலை, வருமானவரி உள்ளிட்டவை குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications